www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம் செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...