உடல் உள்ளமதை தூய்மைப்படுத்தி பிராணனை
உட் செலுத்துவதாம் வாசி.
உள்ளுணர்வு மெய்யுணர்வாய் மாறுமே
வாசி உள் நுழைந்த பின்
தீங்கின்றி என்றும் நமைக் காக்குமாம்
வாசி எனும் உள்வட்டம்.
தீய எண்ணங்கள் யாவும் அண்டாவண்ணம்
நமைக் காக்குமாம் வாசி.
விதிமுறை, பயிற்சி, உணவு முறை மூலம்
நம்மை சீர்படுத்தும் வாசி.
வாசியை முழுதும் அறிந்து உணர்ந்தோர்
எவ்விதத் தீங்கிற்கும் அண்டார்.
தேனினும் சுவை மிகுந்த வாசியால்
உணரப்பட்டோர் பேறு பெற்றோர்.
எட்டுத் திக்கும் எட்டாத வாசியால்
உள்ளம் மாறுமே உண்மையாய்.
சிவப் பேரொளியை உணர்த்தி மெய்ஞானத்தை
அறியச் செய்யும் வாசி.
உடல் கழிவு அனைத்தும் அகலுமே வாசியை
முழுதாய் உணர்ந்து பயிலயிலே.
மூப்பு எளிதாய் உடலில் இருந்து அகலுமே வாசியால்.
இயற்கையை அறியச் செய்யும் வாசி.
இறையை உணரச் செய்யும் வாசி.
சீவபக்தியால் முக்தியை அடையலாம் வாசியால்.
கழிவகன்ற உடலே மெய்யுடல்.
உட் செலுத்துவதாம் வாசி.
உள்ளுணர்வு மெய்யுணர்வாய் மாறுமே
வாசி உள் நுழைந்த பின்
தீங்கின்றி என்றும் நமைக் காக்குமாம்
வாசி எனும் உள்வட்டம்.
தீய எண்ணங்கள் யாவும் அண்டாவண்ணம்
நமைக் காக்குமாம் வாசி.
விதிமுறை, பயிற்சி, உணவு முறை மூலம்
நம்மை சீர்படுத்தும் வாசி.
வாசியை முழுதும் அறிந்து உணர்ந்தோர்
எவ்விதத் தீங்கிற்கும் அண்டார்.
தேனினும் சுவை மிகுந்த வாசியால்
உணரப்பட்டோர் பேறு பெற்றோர்.
எட்டுத் திக்கும் எட்டாத வாசியால்
உள்ளம் மாறுமே உண்மையாய்.
சிவப் பேரொளியை உணர்த்தி மெய்ஞானத்தை
அறியச் செய்யும் வாசி.
உடல் கழிவு அனைத்தும் அகலுமே வாசியை
முழுதாய் உணர்ந்து பயிலயிலே.
மூப்பு எளிதாய் உடலில் இருந்து அகலுமே வாசியால்.
இயற்கையை அறியச் செய்யும் வாசி.
இறையை உணரச் செய்யும் வாசி.
சீவபக்தியால் முக்தியை அடையலாம் வாசியால்.
கழிவகன்ற உடலே மெய்யுடல்.
Comments
Post a Comment