Skip to main content
லம்பிகா யோகம்
*******************

சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்!

மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்!

முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள்.

எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.

மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர்.

அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்;
இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள்.

அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும்.

இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன.

உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன.

பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும்.

அந்த மாதிரி நிலையில் பல ஆண்டுகள் அப்படியே இருக்கும்.

அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.

சித்தர்கள் இந்த லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள்.பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.தான் நினைத்தபோது உடலை நீக்கி இறைநிலை அடைந்தார்கள்.

இனி லம்பிகா யோகம் பற்றி விரிவாக காண்போம்.

ராஜ நாகம் நல்ல பாம்பு இவ்விரண்டு வகைப் பாம்புகளும்
புற்றுக்குள் நுழையும்போது தலையை வெளியே நீட்டிக்கொண்டு வால் பகுதியை முதலில் நுழைத்து
தலைகீழாக புற்றுக்குள் செல்லும்.

இவ்வாறு புற்றுக்குள் சென்றவுடன் அவைகளின் இரட்டை நாக்குகளில் ஒன்றை உள்நாக்கு வழியாக மேலண்ணத்தில் நுழைத்து உச்சந்தலையில் வைத்துவிட பசி தாகம்,குளிர்,மழை போன்றவற்றால் பாதிக்கப்படாமல் வாழும்.

ஊர்வனவற்றில் பாம்பு, அரணை, உடும்பு இவற்றுக்கு இரட்டை நாக்குகள் உள்ளன.

சாதகமான பருவநிலைகளை தோலின் உணர்வுகள் மூலம் அறிந்துகொண்டு மற்றொரு நாக்கின் மூலம் தலைக்குள் செலுத்திய நாக்கை எடுத்துக் கொண்டு உடல் உணர்வு நிலையடைந்து வெளியே வரும்.

இதேபோல சித்தர்களும் தங்கள் நாக்கின் அடிப்பாகத்தை
அறுத்துக்கொண்டு நாக்கின் நீளத்தை கூட்டி மேலண்ணத்தின் வழியாக தலையின் மேல்பகுதியில் கொண்டுவந்து,இடை பிங்களை என்ற இரு நாசிகளின் மூச்சை நிறுத்தி,நடுநாடி என்று அழைக்கப்படும்.
சுஷும்னா நாடி வழியே நாக்கை செலுத்தி கபாலத் தேன் என்று அழைக்கப்படும் புருவ மத்தியில் உள்ள பினியல் சுரப்பியின் திரவத்தை கட்டுப்படுத்தினால்

இவ்வுடல் மரணம் அடைவதில்லை

மூப்பு அடைவதில்லை,

என்றும் இளமையாக வாழலாம்.

ஜீவசமாதிநிலை அடையலாம்.

என்பதை அறிந்தார்கள்

"ஜீவன்" என்றால் உயிர்.

"சமாதி" என்றால் சமன் - ஆதி.

ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

சில யோகிகள் காடுகளுக்கு சென்று இலம்பிகா யோக நிலையில் அமர்ந்து விடுவார்கள்.

அவர்களது உடலில் கரையான்,மண் புற்றுகளால் மூடப்பட்டாலும் மரணமின்றி பல ஆண்டுகள் யோக நிலையில் அமர்ந்திருப்பார்கள்.

இந்த யோகத்தை தகுந்த குருவின் மூலம் தான் படிப்படியாக கற்க வேண்டும்.

காரணம் நாகங்களில் இரட்டை நாக்கு இருப்பதால் மேலே சென்ற ஒரு நாக்கை
இன்னொரு நாக்கால் இழுத்து விட்டுக் கொள்ள முடியும்.

ஆனால் மனிதர்களால் உட்சென்ற நாக்கை குரு அல்லது இன்னொரு நபர் தலையில் ஓங்கி வேகமாக அடித்தால்தான் சாதாரன நிலைக்குவரமுடியும்.

இந்த யோகத்துக்கு #சர்ப்ப_சாம்பவி_மகா_உபதேசம் என்று நாகாலாந்து யோகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

லம்பிகா யோகம் பற்றிய சித்தர் பாடல்களை கீழே படித்துப்பாருங்கள்.

இடைக்காட்டு_சித்தர் பாடல் வரிகள்

"அண்ணாக்கை யூடே அமுதுண்ணேன்
மெய்ஞானம் ஒன்றன்றி வேறே ஒன்றை நண்ணேன்"-
இதன் பொருள்; நாக்கை நடு நாடியுள் செலுத்த கபாலத்தேன் சுரக்கும்.அதனைக் கட்டுப்படுத்தினால் மெய்ஞானம் பிறக்கும்.

சித்தர் சிவவாக்கியர் பாடல் வரிகள்

"ஆக்கை மூப்பதில்லையே யாதிகார ணத்தினாலே
நாக்கை மூக்கை யுள் மடித்து நாத நாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையு மிக்கழுத்த வல்லீரேல்
பார்க்கப் பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்ம மாகுமே"

இதன் பொருள்;
*****************

நாக்கை இழுத்து வெட்டிவிட்டுக் கொண்டு
மேலண்னத்தில் மூக்கிற்கு உள் உள்ள குருநாடியுள் செலுத்தி
இடை பிங்களையாகிய வலது இடது நாசி சுவாசத்தை நிறுத்தி
நடுநாடியாகிய பிரம்ம நாடியுள் சுரக்கும் திரவ சக்தியை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டால் இவ்வுடம்பு மூப்பு அடைவதில்லை. வயோதிகம் அடைவதில்லை.எங்கும் நிறைந்த இறைவனை பார்க்கும் இடங்களில் எல்லாம் உணர்ந்தறியலாம்.

இந்த லம்பிகா யோகத்தை நன்கு கற்றுனா்ந்த குருமூலமாகவே முறையாக பயில வேண்டும் . மிகவும் ஆபத்தான யோக முறை.

சித்தா்கள் போற்றி.


Comments

Popular posts from this blog

Karma Sastra

KARMA कर्म கர்மா சஞ்சிதமென்பது பின்தொடரும் தான்சேமித்த வினைகளே ! ப்ராரப்தமென்பது இன்றனுபவம் முன்வினைப் பயனதுவே ! ஆகாமிமென்பது இனிதொடரும் இச்ஜென்ம வினையதுவே முக்கருமம் தொலத்தாலே இனிஜென்ம மென்பதில்லையே -------------------------------------------------------------- Transliteration : ஒலிபெயர்ப்பு Sañchitameṉpatu piṉthoṭarum thāṉsēmitha viṉaikaḷē! Prārapthameṉpathu iṉṟaṉupavam muṉviṉaip payaṉathuvē! Ākāmimeṉpatu iṉithoṭarum ichjeṉma viṉaiyathuvē Mukkarumam tolathtālē iṉijeṉma meṉpathillaiyē -------------------------------------------------------------- Translation : மொழிபெயர்ப்பு Sanchita is the residual balance karma that follows ! Prarapta is that which is now experienced in this life ! Akami is balance accumulated in this life carried over When the balance of all 3 is nil, then there is no rebirth  ------------------------------------------------------------- What is Prarabdha Karma? A collection of past actions, which are ready to be experienced through t...
மனிதபிறவி... ஓா் உயிர் மனிதபிறவி எடுக்கவேண்டுமானால் என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் கடந்துதான் பின் மனிதபிறவியை அடையமுடியும். அப்படி அடைந்த மனிதன் மரணித்தால் மீண்டும் புல் பூண்டு மரம் செடி கொடி பறவை விலங்கு. என என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் பெற்று பின் மனிதபிறவி பெறுவான் என்று சித்தா்களின் நூல் கூறுகின்றது.. ஆனாள் இறைவனின் அருள்பெற்ற புன்னியவான்களுக்கு மட்டுமே உடனடியாக மனிதபிறவி கிடைக்கும்.. அல்லது தவங்களை மேற்கொண்டவா்களுக்கு மனிதபிறவி கிடைக்கும்.. உதாரணத்திற்க்கு புராணகாவியங்களில் மகாபாரதத்தில்.. பீஷ்மரை வதம் செய்வதற்க்காக இறைவனிடம் தவம் செய்த அம்பைக்கு பீஷ்மரை வதம் செய்வதற்க்காக அடுத்த மனிதபிப்பையளித்திருப்பாா்.. ஆனாள் மகாபாரதத்தில் கா்ணனின் பிறப்பென்பது பலயுகங்கள் கடந்து நிகழ்ந்திருக்கும்.. அதாவது கா்ணன் பூா்வஜன்மத்தில் சகஸ்ரகவசன் எனும் ஒரு அசுரனாவான்.. சக்திவாய்ந்த ஆயிரத்தெட்டு கவசங்களை பெற்றிருந்தான்.. ஒரு கவசத்தை உடைக்கவேண்டுமென்றால் பதினான்குவருடம் தவம் செய்து பதினான்குவருடம் அவனுடன் யுத்தம்செய்தால் மட்டுமே அவனின் ஒரு கவசத்தை உடைக்கமுடியும்.. இப்படியாக ஆயிரத்தெட்டு ...