KARMA कर्म கர்மா
சஞ்சிதமென்பது பின்தொடரும் தான்சேமித்த வினைகளே !
ப்ராரப்தமென்பது இன்றனுபவம் முன்வினைப் பயனதுவே !
ஆகாமிமென்பது இனிதொடரும் இச்ஜென்ம வினையதுவே
முக்கருமம் தொலத்தாலே இனிஜென்ம மென்பதில்லையே
--------------------------------------------------------------
Transliteration : ஒலிபெயர்ப்பு
Sañchitameṉpatu piṉthoṭarum thāṉsēmitha viṉaikaḷē!
Prārapthameṉpathu iṉṟaṉupavam muṉviṉaip payaṉathuvē!
Ākāmimeṉpatu iṉithoṭarum ichjeṉma viṉaiyathuvē
Mukkarumam tolathtālē iṉijeṉma meṉpathillaiyē

Translation : மொழிபெயர்ப்பு
Sanchita is the residual balance karma that follows !
Prarapta is that which is now experienced in this life !
Akami is balance accumulated in this life carried over
When the balance of all 3 is nil, then there is no rebirth
-------------------------------------------------------------
What is Prarabdha Karma?
A collection of past actions, which are ready
to be experienced through the present body
How does it interfere in one’s life?
Everything in one’s life happens because of
Prarabdha Karma and nothing else.
So it is not a question of interference in one’s life,
it is that which drives one’s life.
Life span :
Though we generally believe that we are living
because of the food we eat, the food we eat
gets digested and gives us energy only till our
life span which is fixed by our Prarabdham !
Whether our Mind is bound by Prarabdham ?
Only the actions that are related to
our body is bound by Prarabdham.
There is no Prarabdham for mind.
As a prudent person, it is only in
our hands to control the mind.
------------------
முக்கருமம் :
------------------
முற்பிறவி செயல்பாட்டின் சேமிப்பு,
கர்மவினையாக உருவெடுக் கிறது.
வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கும்
நிகழ்வுகளுக்கு அதுவே ஆதாரம்.
கர்மாவிலே இருக்கின்ற மூன்று :
ஸஞ்சிதம், ப்ராரப்தம், ஆகாமி
1 - ஸஞ்சிதம் - சேமிப்பு
2 - ப்ராரப்தம் - அனுபவத்தில் இருப்பது
3 - ஆகாமி - வருங்காலத்தில் அனுபவிக்க வேண்டியது
இந்த பாரதமோ கர்ம பூமி.
கர்மங்கள் என்றால் கர்மபலனும் உண்டு.
ஸஞ்சிதம், ஆகாமி, பிராரப்தம்
என்று அவை மூவகைப்படும்.
முற்பிறவிகளில் செய்த கர்மங்கள் ஸஞ்சிதம்.
முற்பிறவிகளில் செய்த கர்மங்களில் பலன்
கொடுக்க ஆரம்பித்தவை பிராரப்தம் எனப்படும்.
ஞானம் ஏற்பட்ட பிறகு இந்தப் பிறவியில்
செய்யும் கர்மங்கள் ஆகாமி.
"என்னுடைய ஸ்வரூப ஞானம் ஸஞ்சித கர்மாக்களையும்,
இனி செய்யப்போகும் ஆகாமி கர்மாக்களையும் ஒழித்துவிடும்.
ஆனால் பிராரப்தம்- அதன் காலத்தை செலுத்தியே தீரவேண்டும். அந்தபிராரப்தம் முடிந்து க்ஷீண தசையை அடைந்த பிறகுதான் ஞானிக்கும் கூட தேக சம்பந்தம் நீங்கமுடியும்".
- ஶ்ரீ ராமர் :அத்யாத்ம ராமாயணம்
(தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே)
ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வோர் உரு எடுத்து
சுகதுக்கங்களைச் சுவைத்து தன் ஜன்மாவை
கழிக்கிறான்.ஜீவாத்மா பல சுகதுக்கங்களை
அனுபவித்து பிறவியில் உழல்கிறான்.
தராதேவி மஹாவிஷ்ணுவைக் கேட்கிறாள் :
'அசஞ்சல நிஷ்கபட சுத்த பக்தி’
எவ்வாறு ஏற்படுகிறது ?.
அசஞ்சலம் என்றால் மாறாத
நிஷ்கபட என்றால் போலித்தனம் இல்லாத
திட பக்தி ஒரு மனிதனுக்கு எவ்வாறு ஏற்படுகிறது?
கேள்விக்கு இறைவன் மஹாவிஷ்ணு பதில் கூறுகிறார்:
அந்த பதிலானது : விஷ்ணு உவாச:
----------------------------------------------------------------
ப்ராரப்தம் புஜ்யமாணோ ஹி
கீதாப்யாஸாத: ஸதா ஸ முக்த
ஸ ஹீகி லோகே கர்மணா நோபனப்யதே:

அதன் பொருள்:
இந்த உலகில் நாம் சுக துக்கங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதற் கிடையில் நாம் முன் செய்த புண்யங்கள் பலனாக இப்போது நாம் நல்வினையைச் செய்து கொண்டு கீதையை உபாசித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
“சதா கீதாப்பியாச ரதகா”
எவன் ஒருவன் சதா என்னை நினைத்துக் கொண்டு
தன் கடமைகளை ஆற்றிக்கொண்டு கீதை வழியில் நடக்கிறானோ அவன் எப்போதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறான்,
என்கிறார் பகவான் கிருஷ்ணன்.
ப்ராப்தம் என்பது நமக்கு இந்த ஜன்மத்தில் எது ஒட்டுமோ அதுதான். ப்ராரப்தம் என்றால் வினைப்பயன்களை அனுபவிப்பதே ஆகும். அந்த சமயத்தில் நாம் பகவானிடத்தில் முழு நம்பிக்கை வைத்து, நமது கடமைகளை செய்து வந்தால் நாம் “பாலன்ஸ்” தவறாமல் இருப்போம். இது விஷயத்தில் ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகளின் அருளுரையை பார்ப்போம்: “ஒருவர் செய்கிற கர்மம், அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுகதுக்கங்களுக்கு முழுமுதற் காரணம். ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்த்ரீக ரீதியில் எப்படி வேண்டுமானலும் பரிஹாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிற போது அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டு பேசாமல் கிடைக்கிற பக்குவம் இருந்தால் அதுவே ச்லாக்கியம். அதுவே பெரிய பரிஹாரம். உண்மையான பரிஹாரம். பூர்வ கர்ம சமாச்சாரம் எப்படி போனாலும் இனி கர்மபாரம்ஏறாமல்பார்த்துக்கொள்வதேமுக்கியம்.”
மனதிற்கு ப்ராரப்தம் உண்டா?
சரீர சம்பந்தமான விஷயங்களுக்குத்தான் ப்ராரப்தம் உண்டே
தவிர, மனதிற்கு ப்ராரப்தம் கிடையாது. மனதை அடக்குவது விவேகிகளான நம் கையில் தான் உள்ளது.
--------------------------
பாப புண்யங்கள் :
--------------------------
ப்ராரப்தம் என்றும் அப்ராரப்தம் என்றும் இருவகைப்படும்.
ஒருவன் செய்த கர்மங்கள் அனந்தமாயிருக்கையாலே அவற்றில் சிலவற்றைப் பிரித்து 'இவற்றை முன்னம் அநுபவிக்கட்டும், பின்னால் மற்றதைச்
சில சில பிரிவாய் அநுபவிக்கச் செய்யலாம்'
என்று வைக்கையாலே பலங்கொடுக்கத்
தொடங்கியவை ப்ராரப்தங்களாம்.
ஏனையவை அப்ராரப்தங்களாம்.
அப்யுபகத ப்ராரப்தம் என்றும், அநப்யுபகத ப்ராரப்தம்
என்றும் ப்ராரப்தங்கள் இரண்டு வகை.
ப்ராரப்தங்கள் சிலவற்றை அந்தந்த ஜன்மங்களில்
அநுபவிப்பதாக இசைந்து வருகையாலே
அவை அப்யுபகத ப்ராரப்தங்கள்.
மற்றவை அநப்யுபகத ப்ராரப்தங்கள்.
அஷ்டாங்க யோகமானது அப்ராரப்த கர்மங்களை மட்டுமே நீக்கும். ப்ரபத்தி அப்யுபகத ப்ராரப்தம் நீங்கலான மற்ற எல்லா கர்மங்களையும் நீக்கும்.
----------------------------------------------------------------------------------
பிறப்பதற்கு காரணம் கர்மா (பிரம்ம சூத்திரம் 3.1.8-11) :

செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை
அனுபவிப்பதற்காகவே நாம் பிறவி எடுக்கிறோம்
ஒரு செயல் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை பொறுத்து அதன் பலனை நாம் அனுபவிப்போம். நமது அனைத்து செயல்களும் சுற்றுப்புற சூழல், தாவரம், விலங்குகள், மற்ற மனிதர்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கிறது. அந்த பாதிப்பு நன்மையாக இருந்தால் நமக்கு புண்ணியமும் தீமையாக இருந்தால் நமக்கு பாவமும் ஏற்படும்.
பாவமும் புண்ணியமும் ஒன்றை ஒன்று நீக்கிவிடாது. நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக அதர்மமான செயலில் ஈடுபட்டால் அது சரியாகிவிடாது. செய்த தவறுக்கு தண்டனையும் அடுத்தவர்களுக்கு செய்த உதவிக்கு உண்டான நற்பலனும் தனித்தனியே நம்மை வந்து சேரும். நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பாவ புண்ணியங்கள் கலந்தே இருக்கும். பாவ காரியங்கள் மட்டுமே செய்து நல்ல செயல்கள் எதுவும் செய்யாத மனிதனோ அல்லது பாவத்தை முழுதாக தவிர்த்து புண்ணியகாரியங்கள் மட்டுமே செய்யும் மனிதனோ உலகில் கிடையாது. எனவே ஒரு அயோக்கியன் சுகமாக இருக்கிறானே என்று கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. அவன் சுகமாக இருப்பதற்கு காரணம் அவன் செய்த புண்ணியம். அவன் செய்யும் கெட்ட காரியங்களுக்கு நிச்சயம் அவன் தண்டனை அனுபவிப்பான். அதே போல் நான் எப்பொழுதும் எல்லோருக்கும் நன்மை மட்டும் தான் செய்கிறேன், கடவுள் ஏன் என்னை இப்படி தண்டிக்கிறார் என்ற கேள்வியும் தவறு. பாவ புண்ணியங்களின் பலனை தனித்தனியாக அவரவருக்கு சேரவைப்பதில் இறைவன் எந்த தவறும் செய்வதில்லை.
அதிர்ஷ்டம்
நம் வாழ்வில் ஏற்படும் வெற்றி-தோல்விகள், சுக-துக்கங்கள்,
நோய்-ஆரோக்கியம், வளமை-வறுமை, ஏற்ற-தாழ்வு போன்ற அனைத்துக்கும் காரணமாக அமைவது நமது பாவ-புண்ணியங்கள் மட்டுமே. வாழ்வில் நிகழும் பெரும்பான்மையான நிகழ்வுகளுக்கு கடுமையான உழைப்பு, விடா முயற்சி என்பது போன்ற தவறான காரணங்களை கற்பித்துவிட்டு ஒரு சிலவற்றிற்கு அதிர்ஷ்டம் காரணம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இது தவறு. ஒன்று விடாமல் அனைத்து நிகழ்வுகளுக்கும் அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். அதிர்ஷ்டம் என்பதன் பொருள் நாம் ஏற்கனவே செய்த நற்செயல்கள் அல்லது தீயசெயல்களின் பலன் என்பது. எந்த செயலின் பயன் எப்பொழுது எந்த வகையில் நமக்கு பலனைத்தரும் என்பது மனித அறிவுக்கு எப்பொழுதுமே எட்டாது என்பதால் அதை கண்ணுக்கு தெரியாத அதிர்ஷ்டம் என்ற பெயரில் அழைக்கிறோம்.
நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். அதிர்ஷ்டம் என்பது நமக்கு சம்பந்தம் இல்லாமல் தானாக ஏற்படுவதன்று. நமது அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷ்டத்தையும் தீர்மானிப்பது நாம் மட்டுமே. எனவே முடிந்தவரை நல்ல செயல்களை செய்து எதிர்காலத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை நமக்கு ஏற்படுத்திக்கொள்வது நம் கையில் மட்டுமே இருக்கிறது.
எஞ்சியிருக்கும் கர்மபலன்
உண்ணும் ஒவ்வொரு வாய்க்கும் உழைக்க இரு கரங்கள் இருக்கின்றன. நாம் செய்யும் செயல்களின் அனைத்து பலன்களையும் நம்மால் அனுபவித்து தீர்த்து விட முடியாது. எஞ்சியுள்ள பலன்கள் எவ்வாறு நம்முடன் தொடர்ந்து வருகின்றன என்பதை புரிந்து கொள்ள கர்ம பலன்களை மூன்றுவிதமாக பிரித்து வேதம் நமக்கு விளக்கம் அளிக்கிறது.
மூன்று வகை கர்ம பலன்கள்
நாம் ஏதாவது ஒரு செயலில் எப்பொழுதும் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் பாவ புண்ணியங்களை தொடர்ந்து சம்பாதித்துக்கொண்டிருக்கிறோம். இவை ஆகாமி கர்மம் எனப்படும். இவற்றை வங்கியில் வைத்திருக்கும் நடப்பு கணக்கு (Current Account) எனலாம். இவற்றின் பலனை பெரும்பாலும் நாம் அவ்வப்போது அனுபவித்துவிடுவோம். ஆயினும் ஒரு சிறுபகுதி நிச்சயம் எஞ்சி இருக்கும்.
இறக்கும்பொழுது எஞ்சியுள்ள ஆகாமி கர்ம பலன்கள், நாம் பலமுன் பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள சஞ்சித கர்மத்துடன் சேர்ந்து விடும். சஞ்சித கர்மத்தை நெடுங்கால வைப்பு நிதியுடன் (Fixed Deposit) ஒப்பிடலாம். பலனளிக்கும் காலம் (period of maturity) ஒவ்வொரு செயலுக்கும் வேறுபடும். சஞ்சித கர்மங்களில் ஒரு பகுதி பருவமடையும் பொழுது அவை ப்ராரப்த கர்மமாக மாறும். இது சேமிப்பு கணக்கு (Savings Account) ஆகும். பிறந்தது முதல் இறக்கும் வரை நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் பருவமடையும் ப்ராரப்த கர்மமும் ஆகாமி கர்மமும் மட்டுமே காரணமாகும். ஆழ்ந்த உறக்கத்தின்பொழுது நமக்கு கர்ம பலன்களை அனுபவிப்பதிலிருந்து ஓய்வு கிடைக்கிறது. கனவில் ஏற்படும் அனுபவங்கள் கூட நமது கர்ம பலன்கள் தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழிப்பு ஏற்படுவது கர்மபலன்களை நாம் அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை குறிக்கும்.
பிறக்கும்பொழுது ஒருகுறிப்பிட்ட அளவு ப்ராரப்த கர்மத்துடன் பிறக்கிறோம். மனிதருக்கு மனிதர் இந்த அளவு மாறுபடுவதால் அவர்களின் வாழ்நாட்களின் எண்ணிக்கை ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. மரணத்திற்கு ஒரே காரணம் ப்ராரப்த கர்மம் தீர்ந்து விட்டது என்பதே.
முக்தி என்றால் என்ன?
பிறப்பு-இறப்பு மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு பரம பதத்தை அடைவதே முக்தி எனப்படும். எண்ணிலடங்கா முற்பிறவிகளில் செயல் செய்து சேர்த்துவைத்திருக்கும் மிக அதிக அளவிலான சஞ்சித கர்மங்கள் தீருவதற்குள் ஒவ்வொரு பிறவியிலும் அதன் அளவை எஞ்சியுள்ள ஆகாமி கர்மங்கள் மூலம் அதிகரித்து வருகிறோம். எனவே கர்ம பலன்கள் தீர்ந்து நாம் முக்தி அடைவது என்பது நமது முயற்சியில்லாமல் தானாக நடை பெறாது.
பரமனை தெரிந்து கொள்வதால் மட்டுமே நாம் முக்தியடைய முடியும். எப்பொழுது ஞானம் அடைகிறோமோ அப்பொழுது நாம் சேர்த்து வைத்துள்ள மொத்த சஞ்சிதகர்மமும் ஆகாமி கர்மமும் அழிந்து விடும் என்று வேதம் கூறுகிறது. மேலும் பரமனை பற்றிய ஞானத்தை அடைந்தவுடன் புதிதாக ஆகாமி கர்மம் சேராது. எஞ்சியிருப்பது ப்ராரப்த கர்மம் மட்டுமே. எனவே பரமன் யார் என்ற ஞானம் அடைந்தபின் நம் வாழ்வு ப்ராரப்த கர்மத்தின் கட்டுப்பாட்டின்படி நடந்து அது தீர்ந்தவுடன் மீண்டும் பிறவா நிலையை அடைந்து விடுவோம்.

Comments
Post a Comment