அடங்கி நின்ற வாசி கீழே இறங்கு மானால்
அடுத்தடுத்துப் பயிற்சி செய் ஆனமட்டும்
சிந்தை புறஞ்செலா சிவயோகம் இதுவன்றோ
சந்ததமும் செய்துவர சமாதி கூடும்
அசையாத பிராணனுடன் அசையும் வாயு
ஐக்கியம் செய்துவிடப் பழக வேண்டும்
விட்ட எழுத்துடனே விடாத எழுத்தையிங்கு
கட்ட வேண்டும் உயிர் காக்க வேண்டும். (29).
ஓமென்ற அட்சரத்தில் ஒளிந்தே நிற்கும்
'உம்' மென்ற நாதமதை 'ஊமை' என்றார்
சுழிமுனையின் ஒளியதிலே உணர்வை ஊன்றி
சுகவெளியில் 'உம்' மென்ற நாதம் கேளு
நாதத்தில் மனமென்ற ஐந்துதலை நாகம்
நன்றாக இலயமாகும் ஐம்புலன்களோடு
போதமது கூடுமப்பா மெளனம் கொஞ்சும்
போக்கறியான் ஞானியல்ல புண்ணாக்காமே
(30)
கொலை,களவு,பொய்,சூது கூடாதப்பா
புலை, கஞ்சா, லாகிரிகள் ஆகாதப்பா
தன் மனைவி, தன் இல்லம் என்றாலும்தான்
அருந்தலிலே பொருந்தலிலே அளவு வேண்டும்
தன் உழைப்பில், தன் பணத்தில் வாழ வேண்டும்
தயவுடனே ஏழையர்க்கு இரங்க வேண்டும்
இதிலொன்று தவறிடினும் சித்தியில்லை.
Comments
Post a Comment