Skip to main content
சிவாயநம

சிவாயநம
#வாசி என்றால் என்ன என்று கூறுங்கள் உங்கள் கருத்துக்களை மட்டும் பகிர வேண்டுகின்றேன் சிவா
சிவாயநம

நடப்பு நாட்களில் வாசி, வாசி யோகம் என்ற சொல் அதிகமாக உலா வருகிறது... அதில் மயங்காதவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு தற்பொழுது வாசி என்ற சொல் சக்தி வாய்ந்ததாக மாறி விட்டது...

உண்மையில் வாசி என்றால் என்ன...?

சத்தியமாக மூச்சு பயிற்சி அல்ல...

வாசி என்பது "ஒன்றும் இல்லாத தன்மை"

உங்கள் உடல் மற்றும் மனம் இயக்கம் இல்லாது இருந்தால் அந்த சிவ தன்மை திரிந்து வாசியாக மாறும்... எப்படி என்றால் *மனிதனின் படி நிலை...

🗻 *மனிதன்* _(பற்றுகள் உள்ள நிலை)_
🗻 *ஞானி/ யோகி* _(பற்றற்ற நிலை)_
🗻 *சித்தன் / வாசி* _(மனமற்ற / இருவிணை இல்லா நிலை)_
🗻 *சிவம்* _(பரம நிலை / முக்தி நிலை)_

ஆக ஒருவரின் எண்ணம் முழுமையான ஒரே வடிவம் கொண்டு அதாவது எண்ணம் இல்லா எண்ணம் (அ) மனம் இல்லா மனம் இருப்பார் என்றால்  சித்தனாவான் அப்பொழுது வாசி தன்மை இயல்பான முறையில் நம்மை இயக்கும் வாசி யின் கட்டுபாட்டில் நாம் இருக்க நாம் சிவ மாக மாறுவோம்

உதாரணமாக நாம் கூற வேண்டும் என்றால் பற்று என்பது மின்சாரமாக கொள்ள வேண்டும், மின்சாரம் இருந்தால் பல எண்ணம் என்னும் மின் சாதனங்கள் இயங்கும், மின்சாரம் இல்லை என்றால் எதுவும் இயக்காது அப்பொழுது வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது மற்ற சாதனங்கள் அமைதியாய் இருப்பதை நாம் காண இயலும், இங்கே தீபம் என்பது வாசி யால் தன்னை உணர்வது பின் சிவ மாகுதல்

இதுவே #வாசி

மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
*சித்தர்களும் சிவபெருமானும்...!!* கேள்வி 1 ; *சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?* அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன...? யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை. கேள்வி 2 ; *சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்...?* ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை ...
மகா சித்தர் காகபுஜண்டர் " காணாத காட்சியெல்லாம்கண்ணில் கண்டு காகமடா புசுண்ரென்று பேரும் பெற்றேன் " காகபுசுண்டர் ஞானம் பாடல் 64 இவ்வாறு புசுண்டர் காகத்தின் வடிவில் இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளை கண்டுள்ளதாக கூறியுள்ளார். தான் எத்தனையோ யுகங்கள் காகத்தின் உருவில் கல்லால மரத்தில் வாழ்ந்திருந்ததாக வசிஸ்டரிடம் கூறியுள்ளார் காக உரு பெற்ற வரலாறு புசுண்டர் ஆரம்பத்தில் காக உருவத்தில் இருந்ததில்லை. ஆரம்பத்தில் மனிதப்பிறவியாகவும், மலைப்பாம்பாகவும்,கடைசி பிறவியில் பிராமண சிறுவனாகவும், அவதரித்திருக்கிறார், வர ரிஷியின் சாபத்தினால் பங்குனி உத்திரம், கன்னி ராசியில் ஒரு வெள்ளாட்டியின் ( விதவை ) மகனாக பிறந்துள்ளார் என்று போகர் கூறியுள்ளார். பிராணமன சிறுவனாக பிறந்த பிறவியில் இவர் இராம பக்தி மிக்கவராக இருந்திருக்கின்றார். இராமரை நேரில் காண வேண்டுமென்ற ஆசையில் மேரு மலைக்கு சென்று லோமச முனிவரை அனுகி, இராமரின் திருவடி கிடைக்காதா? என தேடி உங்களை நாடி வந்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் லோமச முனிவரோ, " பரம்பொருளும் ஆன்மாவும் வேறு இல்லை. நீரின்று பிரியாத அலகைள் போல பரமாத்...