மகா சித்தர் காகபுஜண்டர்
" காணாத காட்சியெல்லாம்கண்ணில் கண்டு
காகமடா புசுண்ரென்று பேரும் பெற்றேன் " காகபுசுண்டர் ஞானம் பாடல் 64
இவ்வாறு புசுண்டர் காகத்தின் வடிவில் இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளை கண்டுள்ளதாக கூறியுள்ளார். தான் எத்தனையோ யுகங்கள் காகத்தின் உருவில் கல்லால மரத்தில் வாழ்ந்திருந்ததாக வசிஸ்டரிடம் கூறியுள்ளார்
காக உரு பெற்ற வரலாறு
புசுண்டர் ஆரம்பத்தில் காக உருவத்தில் இருந்ததில்லை. ஆரம்பத்தில் மனிதப்பிறவியாகவும், மலைப்பாம்பாகவும்,கடைசி பிறவியில் பிராமண சிறுவனாகவும், அவதரித்திருக்கிறார், வர ரிஷியின் சாபத்தினால் பங்குனி உத்திரம், கன்னி ராசியில் ஒரு வெள்ளாட்டியின் ( விதவை ) மகனாக பிறந்துள்ளார் என்று போகர் கூறியுள்ளார்.
பிராணமன சிறுவனாக பிறந்த பிறவியில் இவர் இராம பக்தி மிக்கவராக இருந்திருக்கின்றார். இராமரை நேரில் காண வேண்டுமென்ற ஆசையில் மேரு மலைக்கு சென்று லோமச முனிவரை அனுகி, இராமரின் திருவடி கிடைக்காதா? என தேடி உங்களை நாடி வந்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் லோமச முனிவரோ, " பரம்பொருளும் ஆன்மாவும் வேறு இல்லை. நீரின்று பிரியாத அலகைள் போல பரமாத்மாவாகிய பெருங்கடலில் அலைகளாகவே மனித ஆத்மாக்களாகிய நாமும் உள்ளோம் என்று உபதேசித்துள்ளார். புசுண்டர் இந்த உபதேசத்தை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இல்லை. அதனால் கோபமடைந்த லோமச முனிவர் " ஏ பிராமன மூடனே ! காகத்தைப்போல் எல்லாவற்றுக்கும் அஞ்சுகிறாய், கூவி அழைத்து உணவு தருபவரைக் கூட கண்டு அஞ்சி ஓடும் காகத்திற்கும் உனக்கும் வேறுபாடு இல்லை, எனவே நீ காகமாக மாறக் கடவாய் " என்று சாபம் கொடுத்தார். சாபத்தினால் காகமாக மாறிய புசுண்டர் இராமபிரானையே மனதில் நினைத்த படி விண்ணில் பறந்தார், இருப்பினும் , முனிவ் புசுண்டரின் ராமபக்தியை கண்டு பாராட்டி அவருக்கு உன்னதமான " இராம மந்திரத்தை " உபதேசித்தார். அதுமுதல் புசுண்டர் காகவடிவில்பல யுக காலங்கள் இராம ஜெபம் செய்து கொண்டு காகபுசுண்டர் என்ற திரு நாமத்தோடு வாழ்ந்து வந்தார்.
இவருடைய பிறப்பில் மற்றொரு கதையும் காணப்படுகிறது. ஒரு யுக அந்த்தில் சிவ கனங்களின் வாகனமாமன அன்னமத்தின் முட்டையிலிருந்து பிறந்ததாகவும் கதை கூறுகின்றது ,
புசுண்டர் பற்றி பொதுக் கருத்துக்கள்
பசுண்டர் தமிழ் இனத்தை சேர்ந்தவர் , பல யுகங்கள் சோதிடம், மருத்துவம், யோகம், ஞானம், ஆகிய துறைகளில் நற்றமிழில் எட்டு நூல்கள் இயற்றியுள்ளார். இவர் வசிஸ்ட மகிரிசிக்கு ஞான உபதேசம் செய்துள்ளார்.
காகபுசுண்டரின் மெய்ஞ்ஞான விளக்கம்
காகபுசுண்டர் அண்டத்தின் உச்சியில் மனதை செலுத்தி கற்பகோடி காலங்கள் வாழ்ந்தவர். சிவனார் கயிலையில் இருக்கும்படி கூற அதன்படி காக உருவத்தில் கயிலையில் இருந்தவர் , மும்மூர்த்திகளையும் கண்டவர் பிறப்பு இறப்புக்களை கடந்தவர்.
காகபுசுண்டர் தம் மெய்ஞான விளக்க நூலில் மெளனத்தின் மேன்மை, சமாதி முறைகள், பிரம்மத்தை அடைதல், வாசி யோகம்,காயகல்ப முறை ஆகியவற்றை விளக்கி மெய்ஞானம் என்ற நூலுடன் வேறு பல நூல்களும் எழுதியுள்ளார்,
காகபுசுண்டர் சமாதி ( தென்பொன்பரப்பி)
காகபுசுண்டர் அவர்மனைவி பகுனாதேவியும், கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்பொன்பரப்பி கிராமத்தில் உள்ள சுவர்ணாம்பிகை உடனுறை சுவர்ணபுரீஸ்வரர் ஆலகயத்தின் பக்கத்தில் கோவின் ஈசான மூலையில் சமாதி கொண்டுள்ளார்.
சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் காகபுசுண்டராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது ஐந்தரையடி உயரத்தில் காந்த தன்மை கொண்ட கல்லால் ஆனது. இது நவ பாசான கூட்டமைப்பிற்கு ஒப்பானது. லிங்கமானது கையால் தட்டிப்பார்த்தால் வெங்கல சத்தம் வரும். இவ் லிங்கம் பிரதோச காலத்தில் 16 முகங்கள் கொண்டதாக காட்சி யளிக்கும்.
இந்த ஆலயம் சித்தர் நெறி அடிப்படையில் பல்வேறு தனிச்சிறப்புகள் கெர்ண்டது. இங்குள்ள சவலிங்கம் சிறிது காலம் ஆழ்ந்து வழிபட்டாலே பக்தர்களை தியான நிலைக்கு கொண்டு செல்ல வல்லது.
சிவலிங்கம் அமைந்த கருவறை எப்போதும், உக்கிரமாகவே உள்ளது. கருவறையில் எரிந்து கொண்டிருக்கும் தீபம் இடைவிடாது துடித்துக் கொண்டே இருக்கும். இது பற்றிய விளக்கம் காகபுசுண்டர் நாடியிலும் உள்ளது. இத்தலம் தென் தமிழ் நாட்டின் பஞ்ச பூத தலங்களில் வாயு தலமாகும்.
இத்தலத்தில் உள்ள நந்தி, இளங்கன்று போலவும், சிவலிங்கத்திற்கு நேர் எதிரில சிவனையே பார்ததுக் கொண்டிருப்பது போல அமைந்துள்ளது. இந்த நந்தி லிங்க ஒருங்கிணைப்பு ஜீவ சமாதி அடைந்துள்ள சித்தர்களின் வாசி ஓட்டத்தை நுட்பமாக உணர்த்தும் வண்ணம் உள்ளது. இதற்கு அபிசேகம் செய்யும் போது அபிசேகப் பொருட்கள் யாவும் நீல நிறமாக மாறி காட்சி அளிப்பது இதன் சிறப்பு அம்சமாகும்
இக்கோவில் காகபுசுண்டர் காகத்தின் முகமும், ஜடாமுடியுடன் கொண்டு தவயோகத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையைில் காட்சி யளித்து அருளாட்சி செய்கிறார் சித்தர் காகபுசுண்டர்
இவர்தம் ஞானப்டாலாக " மாசிலா மனமே மகேசனின் மாளிகை " என்ற வரி நம் தெளிந்த மனதில் எப்போதும் நிலைத்து நிற்கும் தன்மையை தரவல்லது. தெளிந்த மனநிலையில் பக்தியுடன் இறைவரை அழைத்தால் ஞானக்கண்ணில் காட்சி தருவார் என்பது சத்தியம் என்கிறது ஞான நூல்.
Comments
Post a Comment