Skip to main content
* அம்மா வாசி + அமாவாசை *
'பாரடா வாசி என்ற அம்மா வாசி
  பார்தனிலே யார்க்கு மிது தெரியாதையா
ஆரடா வாசி என்ற அம்மா வாசி
 ஆதாரம் ஆறினினும் நடுவே தோன்றி

நேரடா சிவ லிங்க ரூப மாகி
  நிறைந்த பராபரை தானாவுடையுமாகி
ஏரடா இவர்களுட வாசி தோன்றி
  இருந்த தடா குல தெய்வ மென்றுதானே'

   " 144 அமாவாசைக்கு  ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் செய்வது எப்படி வேதவிதிமுறையோ?
   144 அமாவாசை முடிவு வரை மெய்க்குரு நாதர் திருவடி சேவை முடிவுக்கு ஒரு சிஷ்யால் பிரம்மசர்ய விதியை கண்டுனர்ந்து மேல்நிலை வருவார்.
   பின் 144 அமாவாசை முடியும் வரை ஓரிடத்தில் அமர்ந்து தவம் மேற்கொண்டு ஞானநிலை கைவரப் பெற்றவரே குரு ஆவார்.
   அவரே யோக ஞானத்தை போதிக்க தகுதியானவர்.
 
   மேலும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்து சந்திரன் சூரியனுக்குள் அடங்கி விடுவதால் இந்நாளில் ஜீரண உறுப்புகளுக்கு வேலை கொடுக்காது விரதம் என்ற பெயரில் பட்டினி கிடந்தால் மதியமிர்தம் என்றும் சோமபானம் என்றும் சொல்லும் அமிர்தம் நமக்குள்ளேயே தயாராகும்.
     இந்த முறைகளை முறையாக மேற்கொண்டால் மட்டுமே காயகல்ப மருந்துகள் உண்பதாலும், காயகல்ப பயிற்சி செய்வதாலும் பலன் கிடைக்கும்.
   குறிப்பு: 144 என்பது 12 ஆண்டுகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இல்லறத்தில் இருந்து கொண்டே நல்லறம் காணலாம்,

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
*சித்தர்களும் சிவபெருமானும்...!!* கேள்வி 1 ; *சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?* அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன...? யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை. கேள்வி 2 ; *சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்...?* ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை ...
மகா சித்தர் காகபுஜண்டர் " காணாத காட்சியெல்லாம்கண்ணில் கண்டு காகமடா புசுண்ரென்று பேரும் பெற்றேன் " காகபுசுண்டர் ஞானம் பாடல் 64 இவ்வாறு புசுண்டர் காகத்தின் வடிவில் இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளை கண்டுள்ளதாக கூறியுள்ளார். தான் எத்தனையோ யுகங்கள் காகத்தின் உருவில் கல்லால மரத்தில் வாழ்ந்திருந்ததாக வசிஸ்டரிடம் கூறியுள்ளார் காக உரு பெற்ற வரலாறு புசுண்டர் ஆரம்பத்தில் காக உருவத்தில் இருந்ததில்லை. ஆரம்பத்தில் மனிதப்பிறவியாகவும், மலைப்பாம்பாகவும்,கடைசி பிறவியில் பிராமண சிறுவனாகவும், அவதரித்திருக்கிறார், வர ரிஷியின் சாபத்தினால் பங்குனி உத்திரம், கன்னி ராசியில் ஒரு வெள்ளாட்டியின் ( விதவை ) மகனாக பிறந்துள்ளார் என்று போகர் கூறியுள்ளார். பிராணமன சிறுவனாக பிறந்த பிறவியில் இவர் இராம பக்தி மிக்கவராக இருந்திருக்கின்றார். இராமரை நேரில் காண வேண்டுமென்ற ஆசையில் மேரு மலைக்கு சென்று லோமச முனிவரை அனுகி, இராமரின் திருவடி கிடைக்காதா? என தேடி உங்களை நாடி வந்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் லோமச முனிவரோ, " பரம்பொருளும் ஆன்மாவும் வேறு இல்லை. நீரின்று பிரியாத அலகைள் போல பரமாத்...