ஜீவ சமாதி ஆக வேண்டும் என வாசி யோகி தீர்மானித்தால் அதற்கு சில முக்கிய செயல்பாடுகளை தீவிரமாக செய்ய வேண்டும்.
1) வாசி யோகா
2) உணவின்றி காற்றை சுவாசித்து வாழும் பயிற்சி,
3) நமது சக்தி உடல்கள், சக்தி மையங்கள் மற்றும் நாடிகளை பற்றிய தெளிவான புரிதல்.
இவற்றை சரியாக தெரிந்து இருத்தல் மற்றும் முழுமையான பயிற்சி அவசியம்.
வாசி யோகாவில் ஆரம்ப நிலையில் இருந்து ஊர்த்தவ வாசியில் (18 வகைகள் உள்ளது).
நல்ல பயிற்சி பெற்ற பின் ஶ்ரீ கிருஷ்ண வாசியில் முழுமையான நிபுணத்துவம் பெற வேண்டும். இயல்பாக ஶ்ரீ கிருஷ்ண வாசி இயங்க வேண்டும்.
ஆரம்ப வாசி பயிற்சி மற்றும் ஊர்த்தவ வாசியில் இழுக்கும் உட்சுவாசம் குறைவாகவும், விடும் உட்சுவாசம் நீண்டும் இருக்கும்.
ஶ்ரீ கிருஷ்ண வாசியில் இழுக்கும் உட்சுவாசம் நீண்டும், விடும் உட்சுவாசம் குறைந்தும் இருக்கும்.
ஶ்ரீ கிருஷ்ண வாசிக்கும் மற்ற ஊர்த்தவ வாசிக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் உள்ளது. ஊர்த்தவ வாசியானது சக்தி உடல்கள் மற்றும் சக்தி மையங்களின் மேல் அதீத விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
ஶ்ரீ கிருஷ்ண வாசியானது கேவல கும்பகத்தை இயல்பாக உருவாக்கும். ( அது தான் இறுதியில் மிக அவசியமானது)
ஊர்த்தவ வாசியை குறைந்த பட்சம் 15 லட்ச உட்சுவாசத்தை செய்தால், உடலில் வளர்ச்சிதை மாற்றத்தில் மாபெரும் தாக்கத்தை உருவாக்கிவிடும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும்.
ஶ்ரீ கிருஷ்ண வாசியானது உண்ணாக்கிற்கும், பீனியல் சுரப்பிக்கும் நடுவே இயங்க கூடியது. கேவல கும்பகத்தை இயல்பாக உருவாக்க கூடியது.
நுரையீரல் மற்றும் மூக்கை பயன்படுத்தாமல் உண்ணாக்கு மற்றும் பீனியலுக்கு இடையே சுவாசித்து வரும் போது, உடலில் உள்ள ரோம துளைகள் காற்று,பூமி மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்சக்தியை சுவாசிக்க ஆரம்பிக்கும். ( சவ்வூடு பரவுதல் எனும் முறையை போலவே)
இந்த நிலையில் மூக்கு மற்றும் நுரையீரல் தேவைகள் இல்லாமல் ஆகிவிடும். இடா மற்றும் பிங்கல நாடிகளின் இயக்கம் முழுமையாக நின்று போய், சுழுமுனை நாடியின் இயக்கம் முழுமையாக இயங்க தொடங்கும். இந்த நிலை தொடர்ந்து நிகழும் போது, உண்ணாக்கு மற்றும் பீனியல் சுரப்பிக்கு நடுவே இயங்கும் உட்சுவாசமானது, கேவல கும்பகமாகி நின்று விடும். மிக இயல்பாக, எந்த வித சிரமமும் இல்லாது சுவாசம் அதற்கு அடங்கி நிற்கும்.
ஆனால் வாசி யோகியின் முழுமையான விழிப்புணர்வு கட்டுப்பாட்டில் சுவாசம் இருக்கும். ( அதற்கு நீண்ட பயிற்சி தேவை).
இந்த நிலையில் வாசி யோகியின் உடலில் உள்ள நச்சு பொருட்கள் மற்றும் கபம் முழுமையாக வெளியேற்றப்பட்டு இருக்கும்.
இதை கைவரப்பெற்ற வாசி யோகி தனது பெளதீக உடலையும் சேர்த்து 6 சக்தியுடல்களை பிரிந்து இயக்கும் அல்லது கையாளும் ஆற்றலை பெற்று இருப்பார்.
இந்த பெளதீக உடலின் தேவைகள் போதும் என தீர்மானிக்கும் வாசி யோகி, சூட்சம சக்தி உடல் (astral body )வழியாக அனைத்தை நன்மைகளையும் தனக்கும் மற்றும் இந்த உலகிற்கும் செய்து கொள்ள இயலும் என உறுதியாக தீர்மானிக்கும் பட்சத்தில், ஜீவ சமாதி நிலைக்கு தயார் ஆகிறார்.
ஒரு வாசி யோகி ஜீவ சமாதி ஆகவேண்டும் தீர்மானித்தால், தீர்மானிக்கும் நிலையில் இருந்து குறைந்த பட்சம் 5 வருடங்கள் தீவிரமாக உழைக்க வேண்டும்.
உடலை, இந்திரியங்களை, மனதை, நாடிகளை, சக்தி மையங்களை, சக்தி உடல்களை சரிவர இயக்கி கையாள பழக வேண்டும்.
இவை அனைத்தும் சந்தேகமின்றி கையாள கூடிய வாசி யோகி, ஜீவ சமாதி அடைய அனைத்து தகுதியும் உடையவர் ஆகிறார்.
ஜீவ சமாதி அடைவது என்பது மாபெரும் விஞ்ஞானம்.
Comments
Post a Comment