Skip to main content
www.supremeholisticinstitute.com


மன்மனம் எங்குண்டு?

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே .
– அகத்தியர் ஞானம் 23
மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த

கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர்

விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை?
மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள்
எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால்,
“மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை”
மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம்.
இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும்
தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும்
இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை
மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள்.
இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர்,
உருத்தரித்த நாடியில்
ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே
கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்
மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் ஆணை
அம்மை ஆணை உண்மையே !
வயது முதிர்ந்த கிழவரும் மனத்தின் சக்தியைப் பயன்படுத்தி,
வாயுவை நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமரனாவர்.
மேனியும் சிவந்திடும் என ஆணை இடுகிறார் சிவவாக்கியர்.
இவ்வாறு மனத்தின் மாட்சியைப் பற்றி நம் சித்தர்கள் கண்ட பல
உண்மைகள் இன்னும் ஆராயப்படாமல் காத்துக் கிடக்கின்றன.

எந்த ஒரு இயந்திரத்தையும்மேம்படுத்த வேண்டின் முதலில்
காணவேண்டியது அதன் மானுவலைதான் !
கையேடுதான் மொத்தமும் காட்டிக்கொடுக்கும் !

இயந்திரத்தை மேம்படுத்தஅது எப்படி செய்யப் பட்டுள்ளது,
எப்படிஇயங்குகிறது , அதன் பூர்வீகம் என்ன ?
என அத்தனையும் புரிந்து கொண்டால்அந்த இயந்திரமும் நம் வசப்படும்
அது போல் வாழ்வை நம் வசப்படுத்தநமது வாழ்வின் கருவியான நமது
உடலைப் பற்றிய பூரண புரிதல் இருந்தால்வாழ்வும் நமக்கு வசமாகும் !
    வாழும்போதேவேண்டியவை விரும்பியபடி சேர்க்கவும் ,
கர்மவினை சூழும் சூட்சுமமும் அறிந்து,தன்னை அறிந்து இன்புறும் தந்திரம் அறியவாழும் போது நெறியுடன் இன்பமாக
வாழ்ந்து பயணத்தின் முடிவில்சேரிடம் சேர ,நாம் எங்கு வந்திருக்கிறோம்
,எங்கு போக இருக்கிறோம் என்பதைத் தெளியுறவும்,
வாழ்வை நடத்தும் போது நசுங்காமல்நடக்கும் வழியும், ,மற்றவர் மனம்
நோகாமல் நம் வழி போகும் லயமும்
வாழ்வின் வளத்திற்கு சுத்தவழியில்
சுமை சேராமல் செல்வம் சேர்ப்பதுவும்
வாழும் போதே சந்தோஷமாக வாழ்வை
அனுபவிக்கும் வழியும் ,அறியவும் ,இத்தனைக்கும்
தன்னை அறிந்தவன் தலைவன் ஆவான் என்றபடி ,
தன் உடலைச் சரிவர அறிந்து
தன் வழி நடக்க உபயோகித்தலேநமது வாழ்வின்பொருள் !


Comments

Popular posts from this blog

*சித்தர்களும் சிவபெருமானும்...!!* கேள்வி 1 ; *சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?* அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன...? யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை. கேள்வி 2 ; *சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்...?* ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை ...
மகா சித்தர் காகபுஜண்டர் " காணாத காட்சியெல்லாம்கண்ணில் கண்டு காகமடா புசுண்ரென்று பேரும் பெற்றேன் " காகபுசுண்டர் ஞானம் பாடல் 64 இவ்வாறு புசுண்டர் காகத்தின் வடிவில் இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளை கண்டுள்ளதாக கூறியுள்ளார். தான் எத்தனையோ யுகங்கள் காகத்தின் உருவில் கல்லால மரத்தில் வாழ்ந்திருந்ததாக வசிஸ்டரிடம் கூறியுள்ளார் காக உரு பெற்ற வரலாறு புசுண்டர் ஆரம்பத்தில் காக உருவத்தில் இருந்ததில்லை. ஆரம்பத்தில் மனிதப்பிறவியாகவும், மலைப்பாம்பாகவும்,கடைசி பிறவியில் பிராமண சிறுவனாகவும், அவதரித்திருக்கிறார், வர ரிஷியின் சாபத்தினால் பங்குனி உத்திரம், கன்னி ராசியில் ஒரு வெள்ளாட்டியின் ( விதவை ) மகனாக பிறந்துள்ளார் என்று போகர் கூறியுள்ளார். பிராணமன சிறுவனாக பிறந்த பிறவியில் இவர் இராம பக்தி மிக்கவராக இருந்திருக்கின்றார். இராமரை நேரில் காண வேண்டுமென்ற ஆசையில் மேரு மலைக்கு சென்று லோமச முனிவரை அனுகி, இராமரின் திருவடி கிடைக்காதா? என தேடி உங்களை நாடி வந்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் லோமச முனிவரோ, " பரம்பொருளும் ஆன்மாவும் வேறு இல்லை. நீரின்று பிரியாத அலகைள் போல பரமாத்...