Skip to main content
ஆத்ம தரிசனம்!
           ( குரு _ சிஷ்யன்)
சிஷ்யன் : ஐயனே!  யோகம்  என்பது
என்ன?
குரு : எதனை  அடைவதற்காகப் பயிற்சி  செய்கிறோமோ, அந்தப் பயிற்சிமுறை  "யோகம்" என்று  அழைக்கப்படும். இன்னொன்று  எதனை  அடைந்தால்,  அனைத்தையும்  அடைந்தது ஆகுமோ, அதனை அடைவதும் _ அதிலேயே நிலைபெறுவதும் அல்லது  அதனுடன்  ஐக்கியமாதலும் "யோகம்"என வழங்கப்படுகிறது.

 மேலானவனே! பயிற்சிமுறை யோகமானது  பக்தியோகம், ஞானயோகம், கர்மயோகம், அஷ்டாங்கயோகம் அல்லது வாசி யோகம் எனப் பலவகைகளாகச் சொல்லப்படுகிறது. அவரவர்களின்
கர்மவினைகளுக்கு ஏற்ப  சிலர் பக்தியை, சிலர் ஞானத்தை, சிலர் கர்மத்தை, மற்றும் சிலர் அஷ்டாங்க யோகப்பயிற்சியை  உபதேசிக்கின்றனர்.

  எதனையும்  அறிந்து  செய்தால், அவ்வினையால் நலம் விளையும்!
எதனை அடைவதற்காகப்  பக்தியோகம்  செய்யப்படுகிறதோ, அதேபலனை அடைவதற்காகத்தான் அஷ்டாங்க யோகமும், அதே பலனுக்காகத்தான்
கர்மயோகமும்  அனுஷ்டிக்கப்படுகிறது. மேலானதை அறிவதற்கும், அதனை 
அடையச் செய்யப்படும் பயிற்சிக்கும் ஞானமே அதாவது அறிவே பிரதானம்(முக்கியமானது).
ஆகையால்  ஞானயோகமே  சிறப்பானது. 
   
  ஞானம் வேறு, யோகம் வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள்.  அறிந்தவர்க்கு ஞானமும்  யோகமும் ஒன்றே. எந்த
யோகப் பயிற்சி முறைக்கும் அடிப்படையாகவும், அடையப் படவேண்டிய  இலக்காகவும் ஞானமே உள்ளபடியால், ஞானமே பிரதானமானது. எல்லாக்  கர்மத்திற்கும் அதாவது எல்லா யோகப்பயிற்சி முறைகளுக்கும்
ஆதாரமாகவும், இலக்காகவும் ஞானமே உள்ளதால், ஞானயோகப்
பயிற்சி சிறப்பானது.

   வேதத்தின் இறுதிப் பகுதியான  வேதாந்தம்(உபநிஷத்) ஞானத்தையே  மேலானதாகப் போற்றுகிறது. சிஷ்யர்கள்  தேடுவதும், குருமார்கள் உபதேசிப்பதும் ஞானத்தைத்தான்!
 
 மேலானவனே! நான் சொன்னவற்றை எல்லாம் சிரத்தையுடன் கேட்டுவரும் உனக்கு,
பலவகையான பயிற்சிமுறைகளை (யோகங்களை)இதுவரை  உபதேசித்த நான், இனி எதனை அடைவதற்காக  இந்தப் பயிற்சி முறைகள்(யோகங்கள்) அனுஷ்டிக்கப் படுகின்றனவோ, அதனைப்பற்றி விளக்குகின்றேன்
கேள். யோகப் பயிற்சியால் அடையப்படும் நிலையும், பின்னர்
அதிலேயே நிலைத்திருப்பதும் கூட
"யோகம்" என்றே அழைக்கப்படுகிறது.

  தோன்றி மறைவதை அதாவது கால_ தேச எல்லைக்கு உட்பட்டதை விரும்புதல் பந்தம் எனப்படும். தோன்றாமலும் மறையாமலும் உள்ளதை அதாவது  ஆதி அந்தம்
அற்றதை(முதலும் முடிவும் இல்லாததை) அடைய விரும்புதல்
வைராக்கியம் எனப்படும். இந்த வைராக்கியமே யோகத்திற்கு அடிப்படை .  தூயவனே! ஒருவன் இடைவிடாமல், சலிப்பின்றி  யோகப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு
வைராக்கியமே ஊன்றுகோல்
போன்றது. உலகப் பொருட்களின்
மீது வெறுப்புக்  கொள்வது வைராக்கியம் அன்று.

  எது ஆரம்பம் இல்லாததோ, எது
முடிவும்  இல்லாததோ_ அது எங்கும்
நிறைந்தது. எவரெல்லாம் தனது இடைவிடாத, தொடர்ந்த வைராக்கியப் பயிற்சியால், எதனை
அடைந்தால் அனைத்தையும் அடைந்தது ஆகுமோ, "அது"_ எங்கும் நிறைந்தது_ ஒன்றே ஆனது_ காலத்திற்கு  உட்படாத நித்யப் பொருள் என்பதை அறிவர்.எந்த "அறிபவனால்"  எந்த  "அறிவு" கொண்டு  எந்த "அறியப்படுபொருள்" ஒன்றே ஆனதாக அறியப்படுகிறதோ, அந்த நிலையில்  அறிபவன், அறிவு, அறியப்படுபொருள் அனைத்தும்,
பிறப்பு_ இறப்பு அற்ற, ஒன்றே ஆன அந்த மெய்ப்பொருளுடன் ஐக்கியமாகிப் போகும். இந்த  அனைத்தும் தானே ஆன மெய்ப்பொருள் "தானே" ஆகி, அதில் நிலைத்திருத்தலே அடையப்படும் "யோகம்" எனப்படும்.

 மேலானவனே! இதுகாறும் உனக்கு
பயிற்சி யோகம் பற்றியும், மேலான
பரமபதத்தில் நிலைபெறும் யோகம் பற்றியும் விளக்கினேன்.

  பற்றற்றவனே! கவனமுடன் கேட்டுவரும்  உனக்கு மங்களம் உண்டாகட்டும்.நம் இருவருக்கும் இடையே  நடைபெற்ற  இந்த  சம்பாஷணையை  எவரெல்லாம்
படிக்கின்றார்களோ, அவர்களுக்கும்
மங்களம் உண்டாகட்டும்!

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.