Skip to main content
சிதம்பர சக்கரம்
==============

சித்தம் ஆகாசத்தொடு இணையும் போது அதுவே சிதம்பரம். இங்கே கொடுக்கப்பட்ட 'சிதம்பர' சக்கரத்தில் பஞ்சாட்சரம் மந்திரம் உண்டு. வாலையை உணர்ந்தால் அதுவே சச்சிதானந்தம். (சத்+சித்து+ஆனந்தம்)

"ஐம்பதொரட்சரந்தான் ஆச்சு,
நெஞ்ஜெழுத்தாலே நினையா மலந்த
நிசந்தெரியுமொ வாலைப் பெண்ணே.
நோக்கிகோல் வாசியை மேலாக வாசி,
நிலையைப் பாரடி வாலைப் பெண்ணே.
சிதம்பர சக்கரம் தானரிந்தார்
சீமையில் உள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கரமென்றால் அதற்குள்
தெய்வத்தை யல்லவோ அறிய வேணும்"

இந்த சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரம் சுழற்சி முறையில் நமக்கு இடமிருந்து வலமாக, வந்து கொண்டே இருக்கும். அதாவது வாசியோகத்தில் இருக்கும் எவருக்குமே சித்திக்கும் இந்த ஜோதியானது, சஹாஸ்ரத்தில் மேல்நோக்கியே இருக்கும். ‘உன் உடலை வெறும் உப்பிட்ட பாண்டம் என்று மட்டும் எண்ணாதே, அதை பேணவேண்டும்’ என்கிறார்கள் சித்தர்கள். காலங்கிநாதர், போகர், போன்ற சித்தர்கள் எல்லோருமே மேலே சொன்ன இந்த வரிகளை தங்கள் பாடல்களில் சொல்லியுள்ளனர்.

செப்பு தகட்டில் இந்த சக்கரத்தை செய்து வைத்துள்ளவர்கள், முறையாக அதை ஆராதிக்க வேண்டும். பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து அதை இந்த சக்கரம் மேலே கையால் தேய்த்து பூசி, மையத்தில் குங்குமம் இட்டு வெள்ளை மலர்கள் சாற்றி , தூபம் காட்டியபின். தங்கள் தியானத்தை செய்து வரவேண்டும். சில வாரங்களிலோ, மாதங்களிலோ, வருடங்களிலோ அது உங்களை அறியாமல் உங்களுக்குள் ஆன்ம சிந்தனை தந்து சித்த ஆற்றலை பெருக்கும்.

உங்கள் ஆதார சக்கரத்தின் சக்தி நிலைக்கு ஏற்பத்தான் இந்த உயர்வு அமையும். நம் உடலில் உள்ள ஆறாதார சக்கரங்களான மூலாதாரம் முதல் ஆக்னேயம்வரை அனைத்து கதவுகளையும் திறந்து கொண்டுபோனபின் கபாலம் என்ற சிரசில் இலயிக்க ஆனந்தம் தோன்றும். சிலருக்கு சிலது இயங்கும் சில சக்ரங்கள் பழுதுபட்டிருக்கும். அதில் தடையில்லாமல் ஓட்டத்தை உண்டாக்க வேண்டும் என்கிறார்கள்.

நம் மனதை அடக்கியாளவும் அமைதிபடுத்தவும் மனதையே கட்டளைகள் பிரப்பிக்கவைத்து  உடன்படுத்தமுடியாது, அது நடக்காது. அதை திசைத் திருப்பத்தான் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும், அந்த மூச்சின் ஓட்டத்தை அண்ணாக்கின் மேலே மானசீகமாக நின்று கவனிக்கவேண்டும். இதன் அதீத ஆழ்ந்த முறைதான் வாசி பயிற்சி. இதன் மூலம் சக்கரங்களை திறந்துகொண்டு ஆகாய வாசலுக்கு செல்லலாம் என்கிறார்கள். ஆறாதார சக்கரங்கள்தான் பூமி, சஹாஸ்ரம்தான் ஆகாயம், மூலதாரத்துக்கு கீழே முழங்கால்வரை பாதாளம், அதன் கீழே பாதம் வரை அதல பாதாளம் என்று சக்தி சக்கரங்கள் /கதவுகளை வரிசை படுத்தியுள்ளனர்.

இவ்வாரக தெய்வம் இருக்கையில், புத்தி கெட்ட மாண்பர்கள், தங்கள் ஆகாச சக்ரத்தின் கதவு திறந்து வாலை தெய்வத்தை காணமலே சாகின்றதேன் என்று கேள்வி கேட்கிறார் போகர். 

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
*சித்தர்களும் சிவபெருமானும்...!!* கேள்வி 1 ; *சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?* அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன...? யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை. கேள்வி 2 ; *சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்...?* ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை ...
மகா சித்தர் காகபுஜண்டர் " காணாத காட்சியெல்லாம்கண்ணில் கண்டு காகமடா புசுண்ரென்று பேரும் பெற்றேன் " காகபுசுண்டர் ஞானம் பாடல் 64 இவ்வாறு புசுண்டர் காகத்தின் வடிவில் இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளை கண்டுள்ளதாக கூறியுள்ளார். தான் எத்தனையோ யுகங்கள் காகத்தின் உருவில் கல்லால மரத்தில் வாழ்ந்திருந்ததாக வசிஸ்டரிடம் கூறியுள்ளார் காக உரு பெற்ற வரலாறு புசுண்டர் ஆரம்பத்தில் காக உருவத்தில் இருந்ததில்லை. ஆரம்பத்தில் மனிதப்பிறவியாகவும், மலைப்பாம்பாகவும்,கடைசி பிறவியில் பிராமண சிறுவனாகவும், அவதரித்திருக்கிறார், வர ரிஷியின் சாபத்தினால் பங்குனி உத்திரம், கன்னி ராசியில் ஒரு வெள்ளாட்டியின் ( விதவை ) மகனாக பிறந்துள்ளார் என்று போகர் கூறியுள்ளார். பிராணமன சிறுவனாக பிறந்த பிறவியில் இவர் இராம பக்தி மிக்கவராக இருந்திருக்கின்றார். இராமரை நேரில் காண வேண்டுமென்ற ஆசையில் மேரு மலைக்கு சென்று லோமச முனிவரை அனுகி, இராமரின் திருவடி கிடைக்காதா? என தேடி உங்களை நாடி வந்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் லோமச முனிவரோ, " பரம்பொருளும் ஆன்மாவும் வேறு இல்லை. நீரின்று பிரியாத அலகைள் போல பரமாத்...