#தெய்வம்_தேடிவந்து_அருளும்! #திருமூலர்_மந்திர_ரகசியம்; செல்வம், தெளிந்த அறிவு, பெருமை, மிகவும் உயர்ந்த நிலை - இவற்றை விரும்பாதவர் யார்? இவற்றை அடையும் வழி என்ன? திருமூலர் சொல்கிறார். பிரான் அருள் உண்டு எனில் உண்டு நற்செல்வம் பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல்ஞானம் பிரான் அருளில் பெரும் தன்மையும் உண்டு பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே (திருமந்திரம் - 1645) கருத்து : சிவபெருமான் அருள் இருந்தால், அனைத்து விதமான செல்வங்களும் உண்டாகும். சிவபெருமான் அருள் இருந்தால், அறிவு நலம் அடையலாம். சிவபெருமான் அருள் பெறுதற்கரிய பெருமைகளை அருளும், சிவபெருமான் அருள் இருந்தால் தெய்வ நிலையையும் அடையலாம். வரிவரியாக மட்டுமல்ல, வார்த்தை வார்த்தையாக அனுபவித்து உணர வேண்டிய பாடல் இது. பிரான் அருள் - என நான்கு வாக்கியங்களிலும் சொன்ன திருமூலர் முதல் இரண்டு வரிகளில் ‘நல்’ என்ற சொல்லையும், பின் இரண்டு வரிகளில் ‘பெரும்’ என்ற சொல்லையும் இருமுறைகள் பிரயோகித்து உள்ளார்.குருவருளும், திருவருளும் துணை கொண்டு இயன்றவரை அனுபவிக்கலாம் வாருங்கள்!பிரான் என்ற சொல...