காயத்ரி மந்திரத்தை அன்றாடம் சொல்வதால் என்ன நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா..இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளில் மிக முக்கிய பங்கை வகிப்பது மந்திரங்கள் ஓதுவது. கோவில்களில் கடவுளுக்கு பூஜை செய்யும் போது, பூசாரிகள் பரபரப்புடன் மந்திரங்கள் ஓதுவதை நாம் பார்த்திருப்போம். ஏன் இந்த மந்திரங்கள் ஓதப்படுகிறது என்பது என்றைக்காவது உங்களுக்கு தோன்றியதுண்டா? அல்லது ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு மந்திரம் என ஏன் வைத்திருக்கிறோம் என்பதையும். அவைகளுக்குள் என்ன வேறுபாடுகள் என்பதையும் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்மில் பலரும் அதை பற்றியெல்லாம் அதிகமாக யோசித்திருக்கவே மாட்டோம். ஆனால் இப்படி பரபரப்புடன் மந்திரங்கள் ஓதுவதால் நீங்கள் நினைப்பதை விடவும் அதிகளவில் தாக்கங்கள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? பொதுவாக சமஸ்கிருதத்தில் தான் மந்திரங்கள் ஓதப்படும். மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விசேஷ ஒலியுள்ளது. சமஸ்கிருத மந்திரங்களை ஓதும் போது, ஒலி என்பது மிகவும் முக்கியமாகும். அதனை சரியாக உச்சரிக்கும் போது உங்களுக்குள் அது மாற்றங்களை நிகழ்த்தும். இதனால் உங்களுக்கு சக்தியும் வலுவும் கிட்டும். மனித மனத்தின் மீது பல்வேறு ஒலியும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். இலைகளுக்கு மத்தியில் வீசும் காற்றின் மென்மையான சத்தம் உங்கள் நரம்புகளை ஆற்றும். ஓடையில் ஓடும் நீரின் சத்தம் இதயத்தை வசியப்படுத்தும். இடிகளின் சத்தம் பயத்தை உண்டாக்கும். மந்திரங்கள் ஓதுவதால் நம் இயல்பான உணர்ச்சியின் அளவுகள் மேலும் அதிக அளவில் உயர்ந்திடும். அது ஒரு ஊக்கியாக செயல்பட்டு, வாழ்க்கையில் நம் இலக்குகளை அடைய உதவிடும். நோய்களை குணப்படுத்தும், தீய சக்திகளை விரட்டும், செல்வத்தை பெறுக்கும், தெய்வீக சக்திகளை பெற உதவும், பேரின்ப நிலைக்கு நம்மை தள்ளும் சக்திகளை மந்திரங்கள் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்று தான் காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்தில் சில தெய்வீக குணப்படுத்தும் சக்திகள் உள்ளது. இந்த மந்திரம் நம்முடைய மூன்று கட்ட உணர்ச்சிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் - விழித்திருத்தல், தூங்குதல், கனவு காணுதல். சரி, காயத்ரி மந்திரத்தின் அருமையான குணப்படுத்தும் சக்திகள் தான் என்னென்ன? இதோ தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். மந்திரம் ...... """ஓம் பூர் புவஹ ஸ்வஹ தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநஹ ப்ரசோதயாத் """._________ அர்த்தத்தின் சுருக்கம்: வழிபடத்தக்க சூரியனின் ஆன்மிக உணர்ச்சிகளின் மூலம் படரும் தெய்வீகமான ஒளியின் மீது நாம் தியானம் செய்வோம்; அது நம் உள்ளுணர்வை தட்டி எழுப்பும். மந்திரத்தின் அர்த்தம் இந்த மந்திரம் இருப்பதற்கான காரணத்தை 'காயத்ரி' என்ற வார்த்தையே விளக்கி விடுகிறது. கயண்டம் ட்ரியேட் இட்டி என்ற சமஸ்கிருத சொற்றொடரில் இருந்து வந்தது தான் 'காயத்ரி'. இந்த மந்திரத்தை ஓதுபவர்களை, மரணம் வரை அழைத்து செல்லும் மோசமான சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்கும். இந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்குமான அர்த்தம்: ஓம்: பிரம்மா அல்லது முதன்மை கடவுள் பூர்: அதிமுக்கிய ஆன்மீக ஆற்றலின் உள்ளடக்கம் (பிரான்) புவஹ: துன்பங்களை அழிப்பவர் ஸ்வஹ: சந்தோஷத்தின் உள்ளடக்கம் தத்: அது ஸவிதுர்: சூரியன் போன்ற பிரகாசம் மற்றும் பளபளப்பு வரேண்யம்: சிறந்த, பெரு மகிழ்ச்சி நிலை பர்கோ: பாவங்களை அழிப்பவர் தேவஸ்ய: இறைதன்மை தீமஹி: உள்ளீர்த்துக் கொள்ளலாம் தியோ: அறிவாற்றல் யோ:யார் நஹ: நாம் ப்ரசோதயாத்: ஊக்குவிக்கலாம்.
www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம் செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...

Comments
Post a Comment