Skip to main content
அஷ்டமா சித்திகளும் மூலாதார சக்கரங்களும்
                       

 மனித உடலில் 7 வகையான  சக்கரங்கள் உள்ளன அவையாவன,  மூலாதாரம், சுவதிஷ்ட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்காரம். மனிதனுக்கு ஆறறிவு படைத்த இறைவன் மனித உடலிலும் ஆறு சக்கரங்களையே படைத்தான் - 7 வது சக்கரமான சகஸ்காரம் என்பது மனித உடலை தாண்டியே அமைந்துள்ளது, ஆறு சக்கரங்களை அடைந்தாலே மனிதன் நினைத்ததை எல்லாம் அடைய முடியும், இந்த ஆறு சக்கரங்களை அடைவதே மிகவும் கடினம், இந்த ஆறு அல்ல எட்டு சக்கரங்களை அடைவதே அஷ்டமா சித்தி இதனை சித்தர்கள் மட்டுமே எட்டியுள்ளனர். இதில் எட்டாவது சக்கரம் எனப்படுவது அண்டவெளி ஆகும்.

இந்த சக்கரங்களின் மகிமையை அறியாமல் தான் என்ன பாடுபட்டேன் என்பதை பட்டினத்தார் அழகாக எழுதி உள்ள பாடலின் வாயிலாக காண்போம்.

மூலத்து உதித்து எழுந்த முக்கோண சக்கரத்துள்
       வாலை தன்னை போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே !
உந்தி கமலத்தில் உதித்து நின்ற பிரம்மாவை
       சந்தித்து காணாமல் நட்டழிந்தேன் பூரணமே !
நாபிக் கமல நடு நெடுமால் காணாமல்
       ஆவிகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே !
உருத்திரன் இருதயத்தை உண்மையுடன் பாராமல்
        கருத்து அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே !
விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்
        பசித்து உருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே !
நெற்றி விழிஉடைய நிர்மல சதாசிவத்தை
        புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே !
நாத விந்து தன்னை நயம் உடனே பாராமல்
        போதை மயக்கிப் பொறி அழிந்தேன் பூரணமே !
உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
         அச்சமுடன் நானும் அறிவு அழிந்தேன் பூரணமே !
இடைபிங்கலை இனிய இயல்பு அறியமாட்டாமல்
          தடை உடனே நானும் தயங்கினேன் பூரணமே !
ஊனுக்குள் நீ நின்று உலாவினதை காணாமல்
          நான் என்று இருந்து நலம் அழிந்தேன் பூரணமே !
உடலுக்குள் நீ நின்று உலாவினதை காணாமல்
         காடுமலை தோறும் திரிந்து காலுழந்தேன் பூரணமே !
என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க
          உன்னை அறியாமல் உடல் அழிந்தேன் பூரணமே !
ஐந்து பொறியை அடக்கி உன்னை போற்றாமல்
          நயந்து உருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே !
வாசி தன்னைப் பார்த்து மகிழ்ந்து உனைதான் போற்றாமல்
          காசிவரை போய் திரிந்து காலுழந்தேன் பூரணமே !
எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க
          மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே !

                    பட்டினத்தார் பாடிய இந்த பாடலில் உடலில் உள்ள சக்கரங்கள் பற்றியும், அதில் உறையும் தெய்வங்களை பற்றியும் அதை அறியாமல் தான் அனுபவித்த துன்பங்களை பற்றியும் விரிவாக சொல்லியுள்ளார். மனிதர்களாகி துன்ப கடலில் சிக்கி உழலும் நாம் இனியாவது இறைவன் நம் உள்ளே தான் இருக்கிறார் என்பதனை உணர்ந்து அவரை கண்டு உணரும் பாக்கியத்தையும், இன்ப பெரு வாழ்வு என்னும் பேற்றையும் பெற்று உயவோம்மாக...
                  இனி கடவுளை தேடி கோவில் கோவிலாக அலைவதை விட்டு விட்டு நம்முள்ளே கடவுளை தேடுவோமாக...

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.