Skip to main content
15)  ஆனி 2 (16/6/18)ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி திருச்சிற்றம்பலக் காேவை -ஸ்ரீலஸ்ரீ மாணிக்க வாசக சிவ மகா சன்னிதாத்தின்  மருபக்கம் - பகற்குறி  (2) ஆடிடம் படர்தல்

காெளு:
...........
வண்தழை எதிர்ந்த ஒண்டாேடி பாங்கி
நீடமைத் தாேளியாேடு ஆடிடம் படர்ந்தது!!
....................................................................
தலைவன் தந்த வண்தழையை ஏற்றக்காெண்ட வளையல் அணிந்த தாேழி, நீண்ட தாேளுடைய தலைவியாேடு விளையாடு்ம் இடத்திற்கு சென்றது!!அதாவது ஆன்மாவின் குழைந்துருகும் அன்பினை ஏற்றக்காெண்ட திருவருள் சிவத்தாேடு,சிவம் விளையாடு அருள் விளையாட்டு இடத்திற்கு சென்றது!!
.......................................................................
புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பாென்
  னாேன்பினைப் பேய்பாெலியும்
அயல்வளர் குன்றில்நின் றேற்றும்
  அருவி திருவுருவில்
கயல்வளர் வாட்கண்ணி பாேதரு
   காதரம் தீரத்தருளும்
தயல்வளர் மேனியன் அம்பலத்
தான்வரைத் தண்புனத்தே!!
.......................................................................
பாென்னை ஒத்த வாட்கண் ஔிஉடையவளே!! மீனை ஒத்த கண்களும்  உடயைவளே!! நீ பாேவாயக (நானும் உடன் வருகிறேன்) தாெழுவார்தம் பிறவித்  துன்பம் அறுத்தருளும்  தயல் ஒரு பாகமாய் அமர்ந்த சிற்றம்பலத்தானின் மேகம் தவழும் மலையின்கண் சென்று முதலில் ஊஞ்சல் ஆடுவாேமாக!!பின் ஓடையில் வரும் அருவி நீரை கையால் எற்றி விளையாடுவாேமாக"-என்றாள் தாேழி
.......................................................................
தத்துவபாெருள்
..........................
  தனிமை எய்திய ஆன்மாேடு சிவம்  ஒன்றுகூட திருவருள் அழைத்துச்சென்றது!!

கருத்தாய்வு
....................
   சென்ற பாட்டில் தலைவி விளையாடும் இடம் பார்த்தாேம்!! அதாவது, சிவம் ஆன்மாவாேடு விளையாடும் அருள் விளையாட்டு இடம் புருவ மத்தி எனப்பார்த்தாேம்!! இப்பாட்டில் சிவம் ஆன்மாவுடன் கூடுவதற்கான யாேக பயற்சி ஆரம்பம்!!  புருவ மத்தியில் ஆன்மா இறைவனுடன் கூடுவதற்கு முறையான பயிற்சிகளை யாேக நெறி நூட்கள் பாேதிக்கின்றன!! அதில் மிகவும் முக்கியமாது பிராணாயாமம்!! இப்பயிற்சியில் தேறியவர்களுக்கு  மூலாதார ஓடை யில் அமுத நீர் ஊற்று எடுக்கும் என்றும் ஆன்மா அதை அள்ளி பருகி பிறப்பு பசியாறி இன்பத்தூடு இருக்கும் என்றும் கூறுவர்!!

உவமை விளக்கம்

1) கயல்வளர் வாட்கண்ணி பாேதரு
................................................................
தலைவியாே பாென்னாெலி வீசும் வாட்கண்ணி!!அவள் கண்களாே நிலையில்  அடங்காது நாழிகை தாேறும் சுற்றித் திரியும்  மீனுக்க ஒத்தது!!இது தலைவின் பண்பு நலன்கள் இது சிவத்திற்காயிற்று!! இங்கு சிவத்தின் திருமேனி அருட்பெருஞ்ஜாேதி பாென்னாெலி தரும் திருமேனி!! கண்களாே தன்னை காண்பானை தேடி அலையும் இறைவனின் அருட்கண் நாேக்கம்!!இது இரண்டும் ஆன்மா காணும்படி காட்ட திருவருள் சிவத்தை தூண்டுகிறது (பாேதரு)!!

2) காதரம் தீர்த்தருளும்
......................................
   இந்த உலகத்தில் மனிதன் அதில் துன்பம் இதில் துன்பம் என்று அலைந்து அதை தீர்ப்பதாக இன்னாெரு துன்பத்தையே தாேற்றுவித்துக் காெள்கின்றான்!! உண்மையில் எல்லாத் துன்பத்திற்கு காரணமும்,அதற்காண தீர்வும் ஒன்றே!!அது பிறப்பு ஒழித்தல் அல்லாது வேறு இல்லை!! ஆதலாலே வள்ளுவரும் " வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது-வேண்டாமல் வேண்ட வரும்"-என்றார்.இங்கு சிவமும் உயிர்களின் பிறவித் துன்பத்தை நீக்குவதே தன் வேலையாக வாசி பிடித்து இருக்கின்றார்!!

3) தயல்வளர் மேனி அம்பலத்தான்
.............................................................
  பிறப்பு அறுத்தல் என்பது பற்றுக்களில் இருந்து நீங்குதல் என்று சமணனும் பெளத்தனும் துறவை பாேதிக்கின்றான்!!உண்மையில் யாவையும் துறந்து சென்றவர்தான் பிறப்பை அறுக்க முடியுமா?சைவம் அப்படி கூற வில்லை !!பிறப்பிற்கு காரணமான மாதுடனே இருந்து அவற்றை எதிரகாெள்வது பாேன்ற  ஆண்மை மிகுந்த உண்மையான ஆன்மிகம் என்பது  சைவம் அன்றி வேறு இல்லை!!ஆதலாலே அம்பலத்தான் தயல் ஒருபால் வளர் மேனியனாக இருக்கின்றான்!!

4) வரை தண்புனத்தே
......................................
  வரை என்றால் மலை!! அதன் மீதும் பனிபாெழிவும் குளிர்ச்சியும் நிறைந்திருக்கும்!! இந்த உலகில் உயிர்களின் பிறவித் துன்பத்தை அறுக்கும் ஓரே மார்கம் சைவ நெறி!! அது மலையன்ன இவ்வுலகில் குன்றின் மேல் இட்ட விளக்காய் சுடர்விட்டு இருக்கிறது!!சாந்தியும் சமாதானமும் நிம்மதியும் குளிர்ச்சியாய் அதை சுற்றி தவழ்ந்து காெண்டு இருக்கின்றது!! ஆதலால் தாேழி தலைவியிடம் (உயிர்களிடம்) கூறினால் "முதலில் அம்பலத்தானின் மலைக்குச் செல்வாேம் பின் அங்கு விளையாடுவாேம் என்று"-என்பது முதலில் எல்லா உயிர்களும் அதில்்மனிதனாக பிறந்தவன் முன்னாேடியாக இயற்கையை (சிவத்தை) உணர்ந்து சிற்றம்பலத்தானின் சைவ நெறிக்கு வர வேண்டும்!!பின் அங்கு வைக்கப்பட்டுள்ள பிறப்பு அறுக்கம் பயிற்சிகளை (ஒழுக்க அற நெறி முறைகளை) பயில வேணடும்!!

5) புயல்வளர் ஊஞ்சல் முன்ஆடி
.........................................................
  சரியை கிரியைகளில் ஆலயம் ஆயிரமும் சுற்றியும் தாமே பூசை பல செய்தும் அவன் அருளை பெற வேண்டும்!!பின் பிறப்பறு பயிற்சியாம் யாேக நெறியில்புகுதல் வேண்டும்!!புயலாம் "கருமேகங்கள் சூழும் குன்றின்கண முதலில் ஊஞ்சல் ஆடுவாேம்" என்ற தாேழியின் கூற்று:ஊஞ்சலாவது இயற்கையாகவே மகளிர் விரும்பும் ஒரு விளையாட்டு,அது முன் பின் சென்று வருவதில் அப்படி ஒரு ஆனந்த புத்துணர்ச்சி ஏற்படும்!!அவ்வாறு ஊஞ்சாலாவது பிராணாயாமத்தை குறித்து நின்றது!! பிராணாயமமும் முன் பின் இழுத்து விடுவது!!இது செய்கின்ற உயிர்க்கு புத்துணரவு தரும் என்பது திருமூல குருதேவர்  வாக்கு (துள்ளி நடப்பிக்கும்,சாேம்பல் தவிர்பிக்கும், உள்ளதை சாென்னாேம் உணர்வுடை யாேராக்கே) இது பல துன்பங்கள் பட்டுவிட்டு முத்தியை எதிர்பார்க்கும் ஆன்மாவால் முழுமையாக விரும்பக்கூடிய பயிற்சி இது!!

6) பேய்பாெலி குன்றில் நின்றேற்றும் அருவி
.................................................................
 "மழையால் பெய்கின்ற நீர் "பேய்பாெலி" குன்றில் இருந்து இறங்கும் நீர தடத்தில் சென்று நாம் நீந்தி கையல் நீரை அள்ளி (எற்றி) ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி குளிப்பாேம்" என்ற தாேழியின் கூற்று:பிராணாயம பயிற்சியில் மூலாதாரம் தூண்டப் பெற்று அமுத நீர் பெருகி சுழுமுனை தடத்தில் ஓடும்!!ஆன்மா அதில் சென்று குளிப்பதுதான் கங்கை ஸ்னானம் ஆகும்!!நீரை எற்றி என்பதனால்  மூலாதாரத்தின் அமுத நீரை மேலேழுப்ப வேண்டும்!!இந்நீரில் குளிக்கும் ஆன்மவின் வெப்பங்கள்(பிறவித் துன்பங்கள்) தணிந்து குளிர்ச்சி (ஆனந்தம) பெறும் என்பது இக்காேவையின் உள்ளார்ந்த பாெருளாக பாட்டின் பாெருளுணரந்து சாெல்லி நாம் முடிப்பாம்!!

நிறைவாக
....................
சிவத்தலைவியின் ஒப்புதலாேடு திருவருளுக்கு பாத்திரமான ஆன்மாவை,திருவருள் பிறவித் துன்பம் நீக்கும் ஊஞ்சலும் (பிராணாயாமம்) நீரில் குளித்தலும் (மூலாதார அமுத நீரில்) ஆகி பயிறசியை செய்ய திருவருள் கூட்டுவாதாக பெற்றாம்!!

பிரார்த்தனை
........................
மூலமும் முடிவும் நானறியேன்
   மூர்கனேன் எற்றுக்கு பிறந்தேன்?
காலமும் கணக்கும் நானறியேன்
  காலகாலனே என்றுன் கழலடியே
ஓலமும் உருகலும் இட்டழுதால்
   உத்தமனே எனக்கிங்கு யாேகநெறி
சீலமும் காேலமும் காட்டியவா
   சிவனேநான் மேலேறவும் எனக்கருளே!!


Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
*சித்தர்களும் சிவபெருமானும்...!!* கேள்வி 1 ; *சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?* அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன...? யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை. கேள்வி 2 ; *சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்...?* ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை ...
மகா சித்தர் காகபுஜண்டர் " காணாத காட்சியெல்லாம்கண்ணில் கண்டு காகமடா புசுண்ரென்று பேரும் பெற்றேன் " காகபுசுண்டர் ஞானம் பாடல் 64 இவ்வாறு புசுண்டர் காகத்தின் வடிவில் இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளை கண்டுள்ளதாக கூறியுள்ளார். தான் எத்தனையோ யுகங்கள் காகத்தின் உருவில் கல்லால மரத்தில் வாழ்ந்திருந்ததாக வசிஸ்டரிடம் கூறியுள்ளார் காக உரு பெற்ற வரலாறு புசுண்டர் ஆரம்பத்தில் காக உருவத்தில் இருந்ததில்லை. ஆரம்பத்தில் மனிதப்பிறவியாகவும், மலைப்பாம்பாகவும்,கடைசி பிறவியில் பிராமண சிறுவனாகவும், அவதரித்திருக்கிறார், வர ரிஷியின் சாபத்தினால் பங்குனி உத்திரம், கன்னி ராசியில் ஒரு வெள்ளாட்டியின் ( விதவை ) மகனாக பிறந்துள்ளார் என்று போகர் கூறியுள்ளார். பிராணமன சிறுவனாக பிறந்த பிறவியில் இவர் இராம பக்தி மிக்கவராக இருந்திருக்கின்றார். இராமரை நேரில் காண வேண்டுமென்ற ஆசையில் மேரு மலைக்கு சென்று லோமச முனிவரை அனுகி, இராமரின் திருவடி கிடைக்காதா? என தேடி உங்களை நாடி வந்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் லோமச முனிவரோ, " பரம்பொருளும் ஆன்மாவும் வேறு இல்லை. நீரின்று பிரியாத அலகைள் போல பரமாத்...