*சிவாயநம*
_பிரதோசம்_:- *_பிறவி தோசம் போக்கும்_* _நாள்..._
_இந்நாள் அன்று நமக்குள் எழும் கேள்வியும் அதனால் எழுகின்ற விடையும் நம்மை வரும் பிறவி பிணியில் இருந்து விடுபட வைக்கும்..._
*_கேள்வியும் அதற்க்கான விடையும் உங்கள் முன்..._*
*1🔥. எதற்க்காக இந்த மானுட பிறவியை எடுத்தோம்...?*
_வீட்டை விட்டு வெளியேறி கூட்டை அடைந்தோம் அந்த கூட்டை விட்டு வெளி வரும் முன் வீட்டின் வழி அறிந்து மீண்டும் வீடு செல்ல வேண்டும்..._
_கடந்த ஆறு பிறப்பு எடுத்த நாம் மீண்டும் ஏழாம் பிறப்பான மானுட பிறவியில் *நல்விணை தீவிணை* மயக்கம் கொண்டு மீண்டும் பிறப்பு எடுக்க உண்மை அறியாது மாயையில் உழன்று வருகிறோம் அந்த மாயை பிடியில் இருந்து விலக நம்மை உணர மூன்று காலத்தின் தன்மை இது என்று அறிய வேண்டி பிறவி கடலில் இருந்து வெளி வர உண்மை பொருளை உணர்ந்து இப்பிறவி பயன் இது என்று அறிய நாம் மனதை அடக்க இயற்கையாவும் குருவாய் வந்து உபதேசிக்கும் பொழுது பிறவி கடன் தீருமே..._
*கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்*
*இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்*
*மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்*
*உறுவினைப்பயன் இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே.*
*2🔥. இப் பிறவிக்கு முன் நாம் யாதுவாக இருந்தோம்...?*
_இப்பிறவிக்கு முன் நாம் எப்பிறப்போ என்ற எண்ணம் கொள்வதை விடுத்து நாம் என்னவாக இருந்தோம் என்றால் உயிர் பொருளாகவே இருந்தோம் என்ற எண்ணம் நமக்கு வலு பெற வேண்டும் அப்பொழுது மட்டுமே நாம் அனைத்து உயிர்களும் ஒன்று என்ற எண்ணம் நமக்குள் எழும்...._
*அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே*
*பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்*
*பெண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே*
*மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?*
*3🔥. இப்பிறவி நோக்கம் என்ன...?*
_நாம் காணும் உலகில் யாவும் மாயை என்று எண்ணி அதனை அறிந்து அனைத்தும் சிவமாக கருதி பொய்மை பகைமை வேற்றுமை போன்றவைகளை கலைந்து தெளிந்த சிந்தையால் சிவத்தை எண்ணி நம் ஸ்தூல உடலை நிலை என்று எண்ணாமல் நம் அகத்தில் உள்ள சிவத்தை எண்ணி சிவனடி சேர வேண்டும்..._
*கைவடங்கள் கண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்?*
*எவ்விடங்கள் கண்டுநீர் எண்ணிஎண்ணிப் பார்க்கிறீர்?*
*பொய்யுணர்ந்த சிந்தையைப் பொருந்திநோக்க வல்லீரேல்*
*மெய்கடந்து உம்முளே விரைந்து கூடல்ஆகுமே*
*4🔥. இப்பிறவிக்கு பின் என்ன...?*
_அகாரம் உகாரம் அறிந்து அதனை உணர்ந்து நம்முள் உகாரமான உணர்வுகளை ஒடுக்கி நம் சீவனில் இருக்கும் சீவனான சிவத்தின் லிங்க நித்தம் வணங்கி வந்தோமானால் நம் பிறவி கடலை கடந்து ஒளி வடிவமான சிவத்தோடு இணையலாம் இல்லையேல் மீண்டும் பிறவி கடலில் உழல வேண்டியுள்ளது..._
*எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை*
*மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லீரேல்*
*கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம்*
*இட்டமான ஒளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே.*
*5🔥. தற்பொழுது நம் செயல் என்னவாக இருக்க வேண்டும்...?*
_இன்றைய சூழலில் நாம் பிறப்பின் பயன் உணராது நம் பிறப்பே பெரிது என எண்ணி பல பாவங்கள் புரிந்து நம்மை நாமே சீர் கெடும் வகையில் நாம் செயல்கள் பல செய்து இறை உணர்வு அற்று வாழ்ந்து வருவதால் நம்மை முக்தி நிலை அடைய உதவி புரியும் பஞ்ச அட்சர மந்திரத்தை நாம் உணர மறந்தோம் ஆகையால் இந்த ஜட மாயையில் இருந்து விடுபட நாம் காண்பவை யாவும் மாயை என்பதை உணர்ந்து சிவம் தாங்கிய சீவனை சிவமாக்க கொண்டால் நம்மை முக்தி நிலை அடைய உதவும் பஞ்ச அட்சர மந்திரத்தின் பொருள் உணர்ந்து சிவத்திடம் இணையலாம்_
*வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே*
*அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்*
*வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல்*
*அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே.*
*6🔥. உயிரின் தன்மை என்ன...?*
_பல நிலைகளில் நாம் பலவாறாக சிந்தித்து பார்த்தாலும் நமக்குள் ஓர் குழப்பம் வந்து கொண்டே இருக்கிறது என்ன என்றால் உயிர் முதலில் வந்ததா அல்லது உடல் முதலில் வந்ததா என்று நாம் ஆராய வேண்டியது இல்லை... உடலையும் (மாயை) மனதையும் மறந்து (எண்ணங்கள்) மறந்த தன்னிலை அறிய நாம் உண்மை பொருளை அறிய முடியும்... மேலும் நம் சீவன் சிவம் என்று அறிய இயலும்_
*உடம்புஉயிர் எடுத்ததோ, உயிர்உடம்பு எடுத்ததோ*
*உடம்புஉயிர் எடுத்தபோது உருவம்ஏது செப்புவீர்*
*உடம்புஉயிர் இறந்தபோது உயிர்இறப்பது இல்லையே*
*உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே*
*7🔥. உயிரின் இருப்பிடம் என்ன...?*
_இன்னமும் நாம் முழுமையாக உணராது இருக்கிறோம் உயிர் என்ற பொருள் எங்கு உள்ளது என்று... அதனை அறியும் பொருட்டு நாம் குரு என்று கருதும் ஒருவரிடம் கேட்டு அறிய எண்ணுகிறோம் ஆயினும் நாம் உணர்வது இல்லை அப்படி நாம் உணர வேண்டும் என்றால் கபடம் அற்ற மனம் கொண்டு தூய உள்ளம் கொண்டு சிவத்தை எண்ணினால் நாம் உயிர் உறையும் இடத்தை உணர இயலும் மேலும் நம் சீவனில் சீவனாய் இருக்கும் சிவத்தையும் காணலாம்_
*உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம்*
*மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டும் என்கிறீர்*
*உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்*
*கள்ளவாசலைத் திறந்து காணவேண்டும் நாதனை.*
*8🔥. சிவத்துள் ஐக்கியம் எப்படி...?*
_காலம் காலமாக சித்த பெருமக்கள் மற்றும் ஞானி அல்லாத பிறவி மக்கள் சிவத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு முயற்சி ஏதும் இன்றி எண்ணம் மட்டும் கொண்டு வாடி மாண்டு போய் உள்ளனர் அவர்களை பற்றி எம் ஆத்ம குருவான சிவவாக்கியர் மிக அழகாக கூறியுள்ளார் *வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்காள்* என்று அந்த நிலை மாற எவ்வழியில் செல்ல வேண்டும் என்றால் தன் உணர்வு போல் மற்ற சீவராசிகளுக்கும் உண்டு என்று எண்ணி அகத்திய பெருமான் கூறியது போல் *மனமது செம்மை ஆனால்* என்ற பாடல் படி மனதை செம்மை ஆக்க அனைத்தும் ஒன்றி தன் நிலை அறிந்து தான் யார் என்று உணர மனம் பக்குவம் கொள்ளும்_
_அப்படி பக்குவப்படுத்த பட்ட மனமானது வாசி என்னும் தன்மை நமக்கு அனுகூலமாகும் பின் நம் சுவாசத்தை மறக்கும் சமயம் நம்முள் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி எழுந்து அகாரம் உகாரம் மகரம் என்ற மூலத்தின் பொருள் உணர்ந்து ஆஃஞையை அடைய அங்கு அமுதம் என்னும் பிறப்பில்லா தன்மையை தரசெய்யும் அரும் மருந்து நமக்கு கிட்டும், அப்படியே நாம் உணர உணர அங்கு சிவம் என்னும் பேரானந்தம் என்னும் பராபரம் கண்டு அதனுள் இணைந்து பெரு வாழ்வு சிவத்திடம் பொருந்தி வாழலாம்_
*ஊன்றிஏற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து*
*ஆன்றுதந்தி ஏறிடில் அமுதம்வந்து இறங்கிடும்*
*நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்*
*ஆன்றியும் உயிர்ப்பரம் பொருந்திவாழ் வதாகவே*
_மேலும் ஓளவை மற்றும் சித்த பெரு மக்கள் கூறியது போல் *அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது* என்று அது போல் இந்த பிண்டத்தில் உள்ள மனம் எண்ணும் மாய கண்ணாடியில் உள்ள அழுக்கை அகற்ற பஞ்ச அட்சர மந்திரம் கொண்டு அழுக்கை அகற்ற அந்த மாயக்கண்ணாடி நமக்கு ஏணியாக செயல் பட்டு இந்த புவியில் உள்ள யாவையும் நமக்குள் அகப்படுத்தும், அண்ட சராசரங்கள் நமக்குள் ஐக்கியப் படுத்தும் பல உயிர்கள் யாவும் ஓங்கி வளர்ந்து இயக்குவதும் நம் அறிய உதவுவதும் இந்த பஞ்ச அட்சர மந்திரத்தில் தான் மேலும் அனைத்தும் அடங்கும் சிவத்துள் நம்மை அடங்க வைப்பதும் பஞ்ச மகா அட்சர மந்திரம் என்று போற்றப் படும் *சிவாயநம* (அ) *நமசிவாய* மந்திரம் (அ) *ராம* நாமம் மட்டுமே வேறு ஒன்றும் இல்லை *சிவத்திடம் ஐக்கியமாக*_
*இச்சகம் சனித்ததுவும் ஈசனைஐந்து எழுத்திலே*
*மெச்சவம் சராசரங்கள் மேவும்ஐந்து எழுத்திலே*
*உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல்அஞ் செழுத்திலே*
*நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும்ஐந் தெழுத்திலே*
*சிவாயநம*

Comments
Post a Comment