Skip to main content
வேல் வழிபாட்டின் மகத்துவம்:

முருகப் பெருமானின் திருக்கை வேலில் ஒரு அதிரகஸ்ய தத்துவம் உண்டு.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவ வழிபாடுகள் இல்லாத காலங்களில் கூட வேல் வழிபாடு இருந்துள்ளது.

ஆலயங்கள் அமைக்கபடாத காலங்களிலும் வேல், சூலம் போன்ற ஆயுதங்களை வைத்து நம் முன்னோர்கள் வழிபாடு செய்து வந்துள்ளனர். ஏன் வேல் வழிபாட்டிற்கு அத்தனை சிறப்பு என்றால் வேல் தான் ஆன்மாவின் வடிவம், உயிர் வேலின் வடிவம். வேலில் அத்தகைய அற்புத ஷக்தி என்ன இருக்கிறது?, என்றால் அதுவே உண்மை விளக்கமும் ஆகும். ஓம்காரத்தை தீர்க்கமாகவும் பக்தியுடனும் ஒருவர் ஓங்கி உச்சரிக்கும் பொழுது நாபியில் இருந்து எழும் அந்த ஓசை ஆதார சக்ரங்களை கடந்து மேலே விரிந்து ஞான ஒளிப்பிழம்பாக ஸாதகனுக்கு அறியாமலேயே அந்த வேலின் வடிவமாக அவர் மாறிவிடுகிறார்.

அதனால் அந்த நேரத்தில் உடலின் யோக சூக்ஷ்ம நிலையங்களில் ப்ராண சஞ்சாரம் சீராக நடைபெறுகிறது.வாசி யோக நுட்பங்கள் குறித்து அறியாதவருக்கும் கூட அந்த முறையான நிலையை ஓம்காரத்தை சீராக உச்சரிக்கும்போது எட்ட முடிகின்றது. இடகலை பிங்கலை யோகங்கள் என ஏதும் அறிய வேண்டியதில்லை. அஷ்டமா சித்திகளையும் கடந்த ஸமாதி யோகத்தை கூட ஸாதகன் ஷக்தி வேலை முறையாக உபாஸிக்க கிடைக்கும். அது அம்பிகையின் ப்ரீதியாகிறது. ஸ்ரீ வித்யைக்கு நிகரான உபாஸனை வேல் வழிபாடு ஒன்றே ஆகும்.

ஓம் முருகா போற்றி

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
*சித்தர்களும் சிவபெருமானும்...!!* கேள்வி 1 ; *சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?* அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன...? யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை. கேள்வி 2 ; *சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்...?* ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை ...
மகா சித்தர் காகபுஜண்டர் " காணாத காட்சியெல்லாம்கண்ணில் கண்டு காகமடா புசுண்ரென்று பேரும் பெற்றேன் " காகபுசுண்டர் ஞானம் பாடல் 64 இவ்வாறு புசுண்டர் காகத்தின் வடிவில் இருந்து கொண்டு எண்ணற்ற காட்சிகளை கண்டுள்ளதாக கூறியுள்ளார். தான் எத்தனையோ யுகங்கள் காகத்தின் உருவில் கல்லால மரத்தில் வாழ்ந்திருந்ததாக வசிஸ்டரிடம் கூறியுள்ளார் காக உரு பெற்ற வரலாறு புசுண்டர் ஆரம்பத்தில் காக உருவத்தில் இருந்ததில்லை. ஆரம்பத்தில் மனிதப்பிறவியாகவும், மலைப்பாம்பாகவும்,கடைசி பிறவியில் பிராமண சிறுவனாகவும், அவதரித்திருக்கிறார், வர ரிஷியின் சாபத்தினால் பங்குனி உத்திரம், கன்னி ராசியில் ஒரு வெள்ளாட்டியின் ( விதவை ) மகனாக பிறந்துள்ளார் என்று போகர் கூறியுள்ளார். பிராணமன சிறுவனாக பிறந்த பிறவியில் இவர் இராம பக்தி மிக்கவராக இருந்திருக்கின்றார். இராமரை நேரில் காண வேண்டுமென்ற ஆசையில் மேரு மலைக்கு சென்று லோமச முனிவரை அனுகி, இராமரின் திருவடி கிடைக்காதா? என தேடி உங்களை நாடி வந்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் லோமச முனிவரோ, " பரம்பொருளும் ஆன்மாவும் வேறு இல்லை. நீரின்று பிரியாத அலகைள் போல பரமாத்...