Skip to main content
யாருக்கெல்லாம் இந்தக் கேள்வி மூளையைக் குடைந்து கொண்டு வேலை செய்து கொண்டு இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் ஆன்மீகத்தில் ஏறக்குறைய பாதி கரை கடந்து விட்டார்கள் என்று தான் பொருள்.
.
என்ன செய்தால் பிறவியை அறுக்க முடியும்?
.
*** விடாமல் பிராணாயாமம் செய்தால் பிறவியை வென்று விடுவேனா?
.
*** வாசி யோகம் தொடர்ச்சியாக செய்து வந்தால் பிறவியை வென்று விடுவேனா?
.
*** குண்டலினியை சஹஸ்ராரத்தில் ஏற்றி நிறுத்திவிட்டால் பிறவியை வென்று விடுவேனா?
.
.....என்றால், "இல்லை".
...
இவை அனைத்தும் நம் உடலையும் மனதையும் ஆன்மீகத்துக்கு தயார் படுத்தும் நெறிமுறைகள்.
இவற்றையெல்லாம் நித்தம் கடைபிடித்து வருவதால், என்னுடைய உடலும், மனதும், ஆன்மாவும் - ஆன்மீகத்துக்கு பக்குவமடைந்து ரெடி ஆகி விடுகிறது. அவ்வளவே...
...
இந்த பிராணாயாமம், தியானம், வாசி யோகம், குண்டலினி - இவற்றால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்றால் - சித்திகள் செய்ய முடியும்.
...
(சின்ன சின்ன சித்திகள் நிகழும்.)
...
கேள்வி அதுவல்ல.... பிறவியை அறுப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
...
பாவங்கள் செய்யாமல் இருக்க வேண்டும்.
... சரி.... இந்த நொடி முதல் எந்த வித பாவங்களும் செய்வதில்லை என்று முடிவெடுத்தாயிற்று.
...
புண்ணியங்கள் நிறைய செய்ய வேண்டுமா?
... பாவங்களைக் குறைத்துக் கொண்டு (அல்லது முற்றிலும் செய்யாமல்), புண்ணியங்கள் மட்டும் நிறைய செய்து வந்தால், பிறவி அறுபடுமா?
....
...
பெருமக்களே...!!!
பாவங்கள் செய்தால், எப்படி அதை அனுபவிப்பதற்காக மீண்டும் பிறப்பு எடுப்பீர்களோ, அதே போல் புண்ணியம் செய்தால், அந்த சுகத்தை அனுபவிக்கவும் பிறவி எடுத்து தான் தீருவீர்கள்... நிறைய புண்ணியம் செய்து விட்டு இறந்து போனால், நீங்கள் கூட அடுத்த பிறவியில் தமிழகத்துக்கு முதல்வராகலாம்...
...
பாவத்துக்கு கஷ்டம் அனுபவிப்பீர்கள்..
புண்ணியத்துக்கு இன்பம் அனுபவிப்பீர்கள்.
...
விடை:
நீங்கள் பிறவி எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால்,
"எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும்."
..
உங்கள் அக்கௌன்ட் -இல் எந்த வினையும் இருக்கக் கூடாது.
அது பாவமோ, புண்ணியமோ...
எதுவும் இருக்கக் கூடாது..
..
இது மிகச் சுலபம் போல் தெரிகிறது தானே?
...
ச்சி... இது சோம்பேரியின் வேலை ஆயிற்றே என்று தோன்றுகிறதா?
...
ஒரு கேள்வி கேட்கிறேன்.
நீங்கள் சாலையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள். ஒரு பிச்சைக்காரர் உங்களிடம், "சாமி தர்மம் போடுங்க", என்று கேட்கிறார்... என்ன செய்வீர்கள்?
///
பிச்சை போடாவிட்டால், அது பாவக்கணக்கு...
பிச்சை போட்டுவிட்டால், அது புண்ணியக் கணக்கு...
...
இப்போது சொல்லுங்கள் - உங்கள் வினையை பூஜ்ஜியம் ஆக்குவது சுலபமா, கடினமா?
...
முயலுங்கள், நண்பர்களே...
ஓம் நமசிவாய நமஹ...

Comments

Popular posts from this blog

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத...
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ...
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.