வாசி யோகம் பற்றிய ஒரு முழுமையான பார்வை.
{சித்தர்களால் பெரிதும் போற்றப்பட்ட , வணங்கப்பட்ட , ரகசியமான முறையில் பேணப்பட்ட அற்புதமான கலையை நம் சித்த நண்பர்களுக்காக முழுமையாக பகிர்கிறேன் . காலத்தால் அழியாத இந்த அற்புத கலையை நீங்களும் முறையாக பயின்று சித்தத்தை சிவமாகுங்கள். நன்றி .}
வாசி யோகத்தில் நான்காம் அங்கம் வாசிப்பிரானாயாமம். . இதை சொல்வதற்குமுன் நண்பர்கள் கேட்ட பல சந்தேகங்களை போக்கவேண்டும் .
1. வாசி யோகத்தை வெளிப்படையாக சொல்லலாமா . ?
2. குரு நேரடியாக சொல்லிக்கொடுக்காமல் வாசி யோகம் கற்க முடியுமா ?
3. வாசியோகம் செய்ய துறவு அல்லது பிரமச்சாரியம் அவசியமா .?
இல்லற வாழ்வில் இணைந்து இருந்தாலும் வாசி யோகம் செய்ய முடியுமா ?.
4.வாசி யோகத்தை பாதியில் விட்டு விட்டால் துயர் வருமா ?
5. நீங்கள் எப்படி வாசி யோகம் கற்று கொண்டீர்கள் .?

நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான் பெற்று நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊண்பற்றி நின்றஉணர்வுறு மந்திரம்
தான் பற்ற பற்ற தலைப்படும் .
-திருமூலர் திருமந்திரம் பாடல் 85
இந்த வான்வெளி ஆகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இறைவனுடன் நான் சேர்ந்தால்பெற்றது எல்லை அற்றஇன்பம் . அதை வேதமாக திருமந்திரத்தில் சொல்லி உள்ளேன் . அதை கற்று கடைபிடிக்க கடைபிடிக்க உங்கள் உடலின் உணர்வு களில் அந்த இன்பம் தெரியும் .
திரு மந்திரத்தில் அஷ்டாங் யோகம் என்ற வாசி யோகமும் வாசி உருவாக்குவதும் இந்த வையக்கதில் உள்ள அனைவர்க்கும் சொல்லப்பட்டது .. எனவே நான் அனைவர்க்கும் வெளிப்படையாக சொல்வதில் தவறு இல்லை .>
காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 .
என்ற நூலில் பாடல் 996&997 இல் சொன்னது .
“உலகோர்க்காய் இன்நூலை உரைத்திட்டேனே
உரைத்திட்டேன் கருக்குருவை வெளியாய் சொன்னேன் “
.. சித்தி முத்தி யோக ஞான முறையும்சொன்னேன் ..........
............
நெறிக்கண் திறப்பதற்கு நெறியை சொன்னேன்
குறை நீக்கி நரை மாற்ற முறையும்சொன்னேன் .”
பொருள் -
**********
காகபுசுண்டர் தனது பெருநூல் காவியத்தில் வாசி யோகம் செய்வது , நெற்றிக்கண் திறப்பது உடல் நோய் நீக்குவது நரை உண்டாக்கும் முதுமை போக்குவது , அஷ்டமா சித்திகள் அடைவது ஞானம் பெறுவது முக்தி அடைவது ஆகியவற்றிற்கான வழிகளை வெளிப்படயாய் யை சொல்லி உள்ளார் . இவற்றை இவ் உலகில் உள்ள அனைவரும் அறிய சொல்லி உள்ளார் . . எனவே யோகத்தையும் ஞானத்தையும் வெளிப்படையாக சொல்லலாம்,
காகபுசுண்டர் எனக்கு கொடுத்த கட்டளை
நூல் உனக்கு தருவதை மறைவாய் வைப்பாய்
முறையான சிடருக்கு முழுதும் சொல்லு.
நான் உனக்கு சொல்லி கொடுத்த நூலை மறைத்து வை . வாசி யோக முறை முதலில் சொல் . வாசியோக முறை கற்று தெரிய முறையான மாணவர்க்கு , சிவயோகமும் நான் நூலில் கூறியது முழு வதும் சொல் .
எனவே நான் அடிப்படை வாசி யோகம் மட்டுமே வீட்டில் வாசி யோகா தொடரில் சொல்கிறேன் . இது நன்மை தவிர தீமை செய்யாது . .

இதற்கு ஆதிகுருவும் திரு மூலரும் பதஞ்சலியும் திருவள்ளுவரும் சொல்வதை பார்ப்போம் .
வாசி யோக மற்றும் சிவயோக சரித்திரம்
ஆதி சேஷனுக்கு சிவயோகம் கற்க ஆசை வந்தது அதை விஷ்ணுவிடம் சொன்னார் . . விஷ்ணு அதற்க்கு “ மனிதராய் சிவனிடம் சிவயோகம் கற்று மீண்டும் வைகுந்த்தம் வா “ என்று ஆசிர்வதித்தார் .. அதன் படி பதஞ்சலியாக அவதரித்தார் . அவரது உடல் இடுப்புக்கு கீழ் பாம்பு மேலே மனித உரு . அவர் ஆதி சிவனிடம் வந்து வேண்டினார் . அதன்படி சிவயோகமாமுனி , பதஞ்சலி, வியாக்கிய பாதர் , நந்திகள் நால்வர் மற்றும் திரு மூலர் ஆகிய 8 பேருக்கும் சிவயோகத்தை கற்றுக்கொடுத்தார் . இதை திருமூலர் திருமந்திரம் பாடலில் கூறியுள்ளார்.
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்ச்சலி வியாக்ரமர்
என்றிவர் என்னோ டெண்மரும் மாமே
-திரு மந்திரம் பாடல் 67
திருமூலரிடம் காளங்கி எப்படி சிவயோகம் கற்றார் என்பதை பாப்போம்.
பரியான பரிதலத்தில் பணிந்து நின்று
பார்க்கையிலே திரு மூலர் பாதம் கண்டு
கெதியான மோச்ச மென நிற்கும்போது
கேசரியால் மனோன்மனியாள் கவடை திறந்து
விதியான அமைத்தவிதி எழுத்துகூட்டி
வீடான நவக்கிரகவிவரம் சொல்லி
மதியான தவம் காட்டி ரவியுன்ச் சொல்லி
மார்க்கமுடன் வாசியுடன் வழி சொன்னாரே
-காலாங்கி நாதர் கற்பவிதி 82 பாடல் 2.
மனோன்மணி தாய் வாழும் வீடான சுழுமுனையில் துரிய தியானத்தில் இருந்தேன் . அப்பொழுது திரு மூலரின் பாதம் கண்டேன் . . எனக்கு நற்கதி கிடைக்க மோட்சம் என்ற முகக்திக்கு வழி கேட்டேன் . அகர உகர ஆகிய எழுத்துகளின் பொருளும் அவற்றை சேர்க்கும் முறையும் சொன்னார் . நவக்கிரக வீடு என்ற உடல் தத்துவம் 96யின் விவரம் சொன்னார் . வாசி யோகம் செய்யும் வழியும் ,மதியான தவம் என்ற சிவயோகமும் ரவி என்ற முப்பு மார்க்கமும் சொன்னார் .
இந்த பாடலில் அறிவது காலாங்கி துரிய தியானத்தில் திரு மூலரிடம் கற்றார். ஆனால் நேர்முகமாக கற்கவில்லை .
பதஞ்சலி பாடம் சொல்லி கொடுத்ததை சொல்லியுள்ளார் . இது புராணசெய்தி .
பதஞ்சலி சிவயோகம் கற்ற பின் வைகுண்டம் செல்ல காலம் வந்தது . அப்பொழுது மனிதர்களுக்கு சிவா யோகம் கற்று கொடுக்க விரும்பினார். பதஞ்ச்சலி.. அவர் ஆதிசேஷன் அவரது பார்வை அல்லது மூச்சு காற்று பட்டாலே சாதாரண மனிதர்கள் எரிந்து விடுவார்கள் . , எனவே தான்னை சுற்றி திரை அமைத்து அதனுள் இருந்து மாணவர்களை நேரில் பார்க்காமல் பாடம் சொல்லி தந்தார் . அவரின் சொற்களை கேட்டு மாணவர்கள் படித்தார்கள் ..
இது போன்றுதான் .நான் முக நூல் வழி சொல்கிறேன் . அதை படிக்கிறீர்கள்
திருவள்ளுவர் கற்பம் 300 பாடல் 176
கொள்ளுவதற்கு குருவேணும் என்றெண்ணி
யுள்ளங்கலங்க துரைக்க உலகிலுண்டோ
கள்ளமமல்ல கனிந்த குருவாகும் விந்நூல்
வள்ளுவன் மெய் யுரையாய் வையகத்தில் பாடிநேனே
பொருள்-
**********
கற்று கொள்வதற்கு .குரு வேண்டும் என்று உள்ளம் கலங்க வேண்டாம் . இந்நூல் போல் கள்ளம என்ற மறைப்பு இல்லாமல் சொல்லும் நூல் உலகில் இல்லை . என்னுடைய நூலே முதிர்ந்து பழுத்த குரு என்பதை உண்மையாக உலகிற்கு சொல்கிறேன் .
எனவே நீங்கள் குரு இல்லை என்று கவலை படவேண்டாம் நான் எழுதுவது குருவாக இருக்கும் . .

வாசி யோகம் செய்ய துறவு அல்லது பிரமச்சாரியம் அவசியம இல்லை .
அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலாதார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை
அஞ்சும் அடக்கினால் அசேதனம் மாமென்றிட்
டஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.
-திருமந்திரம் பாடல் 2033
கண்டு , கேட்டு , உண்டு , முகர்ந்தது , உற்று அறிய கூடிய அஞ்சு புலன்களையும் அடக்கு அடக்கு என்று அறிவு இல்லாதவர்கள் தான் சொல்வார்கள் . அவ்விதம் அடக்கிய கடவுள்கூட மேல் உலகில் இல்லை . அவ்விதம் அடக்குவது அறிவுடையது இல்லை (அசேதனம் ) என்று அறிந்தேன் . ஆகையால் அஞ்சும அடக்காமலே முக்திபெறும் அறிவு அறிந்தேன் எனவே முக்தி அடைய . பிரமச்சாரியம் அவசியம இல்லை..
ஆண் பெண் இணைப்பை கர்ப கிரியை மற்றும் பரியங்க யோகம் என்ற இரண்டு
அத்தியாயங்கலீல் திரு மூலர் திரு மந்த்திரத்தில் சொல்கிறார் .
அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்பு
செறிகின்ற ஞானத்து செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துறை நாடிப
பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே
-திரு மூலர் திரு மந்திரம் பாடல் 452
மூலாதாரத்திற்கு சிறிது மேல், உள்ள ஆண் பெண் குறிகளும் கால்களும் இணைந்து, அங்கி அப்பு என்ற சுக்கிலம் சுரோணிதம் கருப்பையில் பெய்ய செய்யும் ஞானம் தந்தவன் இறைவன் ., இதனால் பெண்ணை பத்து மாதம் குழந்தையை கருவில் சுமக்க செய்து ,குழந்தை பிறக்கவைத்தவன் இறைவன் . ஆணும் பெண்ணும் இணைந்து சந்ததி உருவாக்குவது இறைவன் தந்த இயற்கை ஞானம் .
கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து
மண்டலம் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வாநீர் உருட்டிட
தண்டோருகாலும தளராது அங்கமே
ஒத்த மனமும் உடலும் கொண்ட கணவனும் மனைவியும் இணைந்து காதல் செய்வது பரியங்க யோகம் . அப்பொழுது உடலிலுள்ள இருவரின் அக்கினி , சூரிய சந்திரமண்டலங்களும் இணைந்து இருவர் உயிர்சக்தியும் பரவெளியில் ஒன்றும் . இவ்விதம வாநீர் என்ற சுக்கில சுரோணிதம் கலப்பதால் இருவர் உடலும் கெட்டு போகாது .
“விந்து விட்டால் நொந்து கெடும் “.. என்றவாகியத்தை மேற்கோள் காட்டி யோகம் செய்ய பிரமாச்சரியம் வேண்டும் என்பார்கள். அது தவறு . விந்து என்பது தலைக்கு மேல் 4 விரல்கடை உயரத்தில் இருக்கும் சஹாஸ்றாரம் அல்லது பிரம்மரந்தராம் என்ற தலம். வாசி யோகம் செய்யும் போது சுழிமுனை என்ற தலைக்கு உள் இருக்கும் இடத்துடம் வாசி யோகத்தை முடிக்க கூடாது . அதற்க்கு மேல் உள்ள சகஸ்ரார தளமும் ஏறி வாசி யோகம் செய்யவேண்டும் .
இந்த விந்து என்ற சஹாஸ்றாரம் தளம் வரை ஏறி வாசி யோகம் செய்யா விட்டால் யோகா பலம் கெடும் . இதுதான்“விந்து விட்டால் நொந்து கெடும்” என்பதன் பொருள் . இதை போகர் 1000 பாடல் 140 ௦ இல் “
:”தாயென்ற யகாரமாம் சதாசிவன்தான் னொன்று
சார்ந்து நின்ற விந்துவதின் மேலுமமாமே”
என்று சொல்லி உள்ளார்
இல்லறம் பற்றி திருவள்ளுவர்கற்பம் 300 பாடல்கள் சொல்வதை பார்ப்போம்.
வாயத்துதைய எந்தனுக்கு மாணவி தானும்
இல்லறமும் துறவறமும் எனக்கே சித்தி
பாடல் 180
எவர்தேற போறார்கள் என்று எண்ணாதே
மருளாமல் இருப்பவரே பெரியோராகும்
மாதருடன் வையகத்தில் வாழழாமே
பாடல் 212
இணை பிரியாமலே துணை மறவாதே நீ
பிணை வழி மாதர்கள் தனையும் அகற்றிடு
உடை கட்டியே மையல்கள் ஊட்டியே
உலகத்தையே சாம்பல் ஆக்கிடும்
பாடல் 214
எனக்கு வாய்த்த மனைவியால் இல்லறத்திலும் துறவரத்திலும் வெற்றி பெற்றேன் .
வாசி யோகாம செய்து கற்பம உண்டு யார் வெற்றி அடைவார்கள் என்று மிரண்டு போகாமல் இருப்பவர் பெரியவர் , அத்தகையோர் உலகத்தில் பெனண்னுடன் சேர்ந்து இல்லற வாழ்க்கை வாழழாம்
உன் மனைவியை மறகாமல் அவளை விட்டு பிரியாமல் இணைந்து வாழ
பிணை வழி மாதர் என்ற விலை மாதர்களை நினைவில் இருந்து அகற்று. அவர்கள் கவர்ச்சியான உடை அணிந்து கவர்ச்சி காட்டி உலகை சாம்பல் ஆககுவார்கள்.
வசிச்டருக்கும் விசுவமித்திரருக்கும் அகத்தியருக்கும் மனைவி யுண்டு . இந்து கடவுள்களுக்கு மனைவி உண்டு . எனவே இல்லறத்தில் இருந்து வாசியோகம் செய்வதே சிறப்பு .

வராது . எந்த அளவு சாதனை செய்தீர் களோ அதற்கு ஏற்ப சக்தியும் சித்தியும் கிடைக்கும் . பிற்காலத்தில் வாசி யோகம் தொடரலாம் . இதுவே விட்டகுறை தொட்ட குறை .

திருமணம் ஆனா பின்பு சித்தர் நூல்களை படித்து தட்டு தடுமாறி பிராணாயாமம் செய்ய ஆரம்பித்தேன் .. சில ஆண்டுகளில் பிராணாயாம நுணுக்கம் தெரிந்தது . . 5ஆண்டுகளுக்கு பின் வாசி இருப்பது தெரிந்தாது அதன் பின் வாசியை பழகினேன் . . பலநேரங்களில் சித்தர்கள் கனவில் கற்பித்தார்கள் சிறிது முன்னேறி தியானம் வரை அஷ்டாங்க யோகம் கற்றேன் . துரிய தியானத்தில் மேல்நிலை வாசியோகம் கற்று கொடுத்தார்கள் . பின்பு அவர்களின் நூலில் கட்டளை கொடுத்தார்கள் காகபுசுண்டர் உங்களுடன் பேசுவதை சொல்கிறார் .
பாருமே மாலுடனே பிரமனோடு
பகர்தெயிவம் யாவையுமே திறந்து காட்டும்
வாரும்மே அவ்வாசல் வழி நீர்தானே
வந்தாக்கால பேசிடுவோம் வாரும் மென்போம
நீருமே அவ்வாசல் வராவிட்டாலே
நீர் ரென்னை தேடாதீர் சும்மா நீரே .
-காக புசுண்டர் பெருநூல் காவியம் 1000 பாடல்
வாசி யோகத்தில் ஆறு தளங்கள் வழி மேலே ஏறி சுழிமுனை திறக்கவேண்டும் . அங்கு துரிய தியானநிலை அடையவேண்டும் . அப்பொழுது காகபுசுன்டரும் பிற சித்தர்களும் உங்களுடன் பேசுவார்கள் . . வேறு வழியில் பேசமாட்டார்கள் . முயற்சிப்பது வீண் ..
பிராணாயாமம = பிராண + அயனம் . பிராணன் என்ற உயிர் சக்தியின் . பயனம .
பிராணாயாமம = பிராண +நியமம் . சுவாசம் செய்யும் நெறி . . நெறிபடுத்தப்பட்ட சுவாசம் தான் பிராணாயாமம . இது பல வித யோகா முறைகளில் பலவிதமாக செய்யப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் ஹடயோக முறை பலரால் கடைபிடிக்கப்படுகிறது . ஹடயோக பிரானயாமங்கள் பத்துவகை படும் . அவைகள் , சூரிய அனுலோம (பீடம்), சந்திர அணு லோம , உஜ்ஜயி, சீதகாரி ,சீததாலி, பசஸ்திரிக்கா , கபாலபதி , பிரமாரி, மூர்ச்ச, பிளவினி ,
ஹட யோகத்தில் தவுத்தி நெட்டி ,பஸ்தி ஆகிய கிரியைகள் பயன் படுத்த படுகின்றன . இவ்விதம் செய்யப்படும் ஹட யோகத்தால் ஞானம் பெற முடியாது . மேலும் பல் உடல் துன்பங்கள் ஏற்படும். எனவே இந்த ஹடயோக முறைகளை தள்ள வேண்டும் என்று அகத்தியர் வாத சௌமியம்
பாடல் 927 இல் சொல்லி உள்ளார் .
பாரப்பா தன்மயத்தைஅறியாமல் தான்
பக்க்தியுடன் அடயோகம் செய்வான் பாவி
வீரப்ப மூச்சடக்கி செவி வாய மூடி
வேகமுடன் பூரிக்கில் மேனிதன்னில்
சாரப்ப மூலமதில் சொருகிக்கொண்டு
தலைவலிதது காதடைத்து முகமும் கோணி
நேரப்பா கண் தெறித்து மதிகலங்கும்
நேர்மை கேட்ட ஹட யோகம் தள்ளு தள்ளே
-பாடல் 927
அன்டா இதனாலே ஒன்றும் இல்லை
ஆதி என்ற மௌனாதி யோகம் பாரே
-பாடல் 928
சாதித்து வரும்போது மைந்தா மைந்தா
தருகின்ற பீடை எல்லாம் தானேபோகும்
பேதித்த தேகமது பிலமாய் நிற்கும்
பிலமான வாசி சிவயோகம் தங்கும் .
-பாடல் 822
பொருள்-
**********
ஹட யோகத்தின் தன்மையை அறியாமல் அப்பாவிகள பக்க்தியுடன் . ஹட யோகம செய்கிறார்கள் . அதன் தன்மை சொல்கிறேன் . வேகமாக மூச்சை உள்ளே இழுத்து செய்யும் ஹடயோக பிராணாயாமத்தால் ( !6; 64;32 , மற்றும் மேலே சொன்ன பிராணயாம முறைகள் ) தலைவலி , காதடைப்பு முகம் கோணி கண் பிதுங்கி மனம் கலங்கும் . (இவை அனைத்தும இரத்த அழுத்த நோய் குறி .. . இவ்விதம் இரத்த அழுத்த நோய் அடைந்தவரை நான் பார்த்து உள்ளேன் .) எனவே நேர்மை இல்லாத ஹடயோக முறை வேண்டாம் என தாள்ளிவிடு இதனால் ஒருபயனும் இல்லை . எனவே மௌனயோகத்தின் அடிப்படையான வாசி யோகம் செய் . வாசி யோகம் செய்து வரும்போது நம்மை பிடித்த வறுமை, துயரம் ,தோல்வி ,பயம் , துக்கம் , துன்பம் ஆகிய பீடைகள் தானே விலகிப்போகும். நோயுற்ற உடல் ஆரோக்கியமாக மாறி பலம் பெரும் . இந்த வாசி யோகா பலத்தால் சிவயோகம் சித்தியாகும் .
ஹட யோகம் பற்றி ராம கிருஷ்ணkrishna பரமஹம்சர் கருத்தை பார்ப்போம். ஒரு ஹடயோகி ராம கிருஷ்ணரிடம் “நான் கங்கை நதி நீர்மீது நடந்து நதியை கடந்தேன் “ என்றார்.
ராம கிருஷ்ணkrishnaர் “ நான்கணா(25 பைசா ) சம்பாதித்தாய் “ என்றார் . நான்கணா கொடுத்தால் படகோட்டி கங்கையை கடந்தது விட்டு விடுவார் . ஹடயோக முறைகள் வித்தை காட்ட பயன் படும் ஞானம் அடைய பயன்படாது என்றார் .
வாசி யோகா பிராணாயாமம்
வெளியே உள்ளவாயுக்கள் காற்று. சுவாசிக்கபடும் கற்று பிராணன் . நெறி படுத்திய சுவாசம் பிராணாயாமம காலக்கணக்கோடு நெறிபடுத்திய சுவாசம் வாசி . முறைப்படி ஆதார தலங்களில் மூச்சை நிறுததி வாசி உருவாக்குவது வாசியோக பிராணாயாமம். .
வாசி யோகா பிராணாயாமம ஐந்து நிலை கொண்டது அவைகள்
1. பூரகம் = மூச்சு காற்றை உள்ளே இழுப்பது .
2.கும்பகம் = மூச்சு காற்றை உள்ளே நிறுத்தல்.
3.ரேசகம் = மூச்சு காற்றை வெளிவிட்டால்
4. உட்பவிவித்தல் அல்லது கேவல கும்பகம்.
5.ஆதார தலங்களில் நிறுத்தி வாசி உருவாக்கல் .
இவற்றை விரிவாக பார்ப்போம் . திருமூலரின் கொள்கைகள் பார்ப்போம் .
-உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய் ஞானம் சேரவும் மாட்டார் .
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
திரு மந்திரம் பாடல் 724
புறப்பட்டு புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ள்ளே நின்மல மாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
புறப்பட்டு போகாண புரிசடயோனே
-திருமந்திரம் பாடல் 575
பொருள்-
**********
உடல் அழிந்தால் உயிர்பிரிந்து விடும் உயிரையும் உடலையும் இணைத்து வைக்கும் சக்தி யானது புரிசடையோன் என்ற சிவன் என்ற உயிர் உடல் இணைப்பு சக்தி . உயிர் என்பது ஒருவகை சக்தி உடல் சிதைவு அடைந்தால் . உயிர்சக்தி உடலை விட்டு பிரியும் . Dr. J. cRIAGCriag venter அவரது குழுவினருடன் ஒரு பாக்டிரியாவின் செயர்கை உடலை Dna matrum Rna moolam செய்து அதி உயிர் உள்ள பாக்டிரியாவை இணைத்தார் . உயிர் உள்ள பாக்க்டிரியவின் உயிர் செயற்கை உடலுக்கு வந்து விட்டது ஆனால் உயர் உள்ள பாக்டிரியா இறந்தது . எனவே உயிர் சக்தி உடலில் இருந்து பிரிந்து வேறு உடலுக்கு சென்றது . . எனவே உடல் சிதைவு ஏற்பட்டால் உயிர் பிரியும் .
உடம்பை வளர்த்தல் என்பது உடலை கொழு கொழுவென வார்ப்பது இல்லை
40 வயதை தாண்டினால் உடல் செல்கள், உற்பத்தி ஆவதைவிட சிதையும் செல்கள் அதிகரிக்கும் . இது வளர் சீதை மற்றம் வயது ஆக ஆக சிதைவு அதிகரித்து உடலஅழியும் .. செல்கள் சிதயாமல் மற்றும் செல் உற்பாத்தி அதிகமானால் உடல் இளமையாகும் . மரணம் ஏற்படாது . இதுவே உடலை வளர்த்தல்.
இவ்விதம் உடலை வளர்க்கும் உபாயம் என்ற தொழில் நுட்பம் அறிந்தேன் . அதனால் உடம்பை வளரத்து எனது உயிர் சக்தியும் வளர்த்து இறவா நிலை பெற்றேன்
உடம்பை வளர்க்கும் உபாயம் எது .? . . .
சுவாச காற்று அதன் விருப்பம் போல் இயங்கி உடலை வளர் சீதை மாற்றத்திற்கு உட்படுத்தி சிதைவை அதிகரிக்கிறது . அதனால் உடல் அழிகிறது... இதை தடுக்க இந்த சுவாச காற்றை நெறிப்படுத்தி உடலுள் இருக்கும் மாசுகளை அகற்றி தூய்மை படுத்த வேண்டும் . அவவிதம் செய்தால் உடல் உறுப்புகள் சிவந்து இளமை ஆகும் . நரைத்த முடியும் கருக்கும் . உயிர் உடலைவிட்டு நீங்காது .
பிராணாயாமத்தில் அடிப்படை மந்திரம் ஓம் . இதை வாசி யோகத்தில் எப்படி உச்சரிப்பது என்பதை சொல்கிறேன்
ஓம் = அ+உ+ம்
இடது நாசி சுவாசம் 16 கலை ஆற்றல்.=ம (நேர்மறை )
வலது நாசி சுவாசம் 12 கலை ஆற்றல் = அ (எதிர்மறை)
வாசி உருவாக்கு தாரைகலை அல்லது அக்கிணிகலை 4 கலை ஆற்றல் =உ (எதிர்மறை)
அ+உ =ம அதாவது சூரியகலை + தாரை கலை = சந்திரகலை . . இது உயிர்சக்தி சமம் நிலை . இதுதான் .
எனவே ஓம் உச்சரிக்க காலநிர்ணயம்
அ = 12/ 2 =6 நொடி
உ =4 /2=2 நொடி
ம 16/2= 8 நொடி
உங்கள் இடது கையை முதுகு தண்டு அடியில் வையுங்கள் அ........6 நொடி .. தொடர்ந்து சொல்லிப்பாருங்க உங்கள் கைகளில் முதுகுதண்டு அடியில் அதிர்வு தெரியும் . உ என்பது 2 நொடி சொல்லுங்கள் தொண்டை யில் உணர்வீர்கள் . ம ...... 8 நொடி சொல்லுங்கள் தலையுள் அதிர்வை உணர்வீர்கள் .
இப்படி அ.......உ.ம ........= ஓம் என்று உச்சரித்து பாருங்கள் இந்த அதிர்வு அலை மூலாதார தளத்தில் இருந்து சுழிமுனை தளம் வரை பரவி ஆறு சக்கரங்களையும் ஊக்கபடுத்தி சக்தி சமநிலை உருவாக்கும் . உயிர் சக்தி பெருகும் .
இதுவே வாசி யோகத்திற்கு அடிப்படை மந்திரம் . மூலாதாரத்தின் பீஜ மந்திரம் . இதை சொல்லி பழக வேண்டுகிறேன் .
கவலை பதட்டம் , மன அழுத்தம் , கோபம் ஆகிய நிலையில் மற்றும் செயல் வெற்றிபெற செயல் செய்வதற்கு முன் 27 முறை சொல்லுங்கள் .. இதன் மகிமை உணர்வீர்கள் .
சந்தேகம் விளக்கம் .
*********************
அ+உ =ம அதாவது சூரியகலை + தாரை கலை = சந்திரகலை . . இது உயிர்சக்தி சமம் நிலை விளக்கவும் .
நாம் நலமுடன் இயங்க பிரபஞ்சத்தில் இருந்து சக்தியை மூச்சு காற்று வழியாக பெறுகிறோம் . மற்றும் நம் உடலிலும் சக்தியை உற்பத்தி செய்கிறோம் . இந்த சக்தி தேவை மொத்தம் . 96 கலை அலகு... கலை என்பதது சித்தர்கள் சக்தியை அளவிட பயன் படும் அளகு .
பிரபஞ்சத்தில் இருந்து பெறுவது 32 கலை Unitஅளவு சக்தி . இந்தசக்தியை பயன் படுத்தி உடல் 64 கலைகள் சக்தியை உற்பத்தி செய்கிறது .. அதாவது ஒரு பிரபஞ்சu கலை இரண்டு உடல் கலை உருவாக்கும் .
நமது இடது நாசி திறன் அல்லது சந்திர கலை அல்லது இடகலை.16 கலை சக்தி . வளது நாசி திறன் அல்லது பிங்ககலை 12. கலை சக்தி ஆக மொத்தம் 28 கலைகள் . பிரபஞ்ச சக்தியை பெற 4 கலை குறைபாடு உள்ளது மேலும் இதனால் உடலில் உற்பத்தி செய்யும் சக்தி 8கலை குறையும் ஆக மொத்தம் 12கலை சக்தி குறைபாடு எல்லோருக்கும் ஏற்படுகிறது .
இந்த சக்தி குறைபாடு செல்களின் இயக்கத்தை பாதித்து கழிவுகளை அகற்ற முடிவது இல்லை . புதிய செல்களை வேனடிய அளவு.. உற்பத்தி செய்ய முடிவது இல்லை
இதனால் உடல் நலிவடைந்து மரணம் ஏற்படுகிறது .
இதை தவிர்க்கும் தொழில் நுட்பம் வாசியோகம்
. . சநரகலை என்ற இடகலையும்யும் சூரியகலை என்ற பிங்கலைம் சமநிலை இல்லை . இரண்டின் வித்தியாசம் 4 கலைகள். இதனால் நோய் மூப்பு சாக்காடு என் ஏற்படுகிறது . வாசி யோகம் மூலம் தாரை கலை அல்லது தாராகலை உருவாகினால் அது 4 கலை கொண்டது ஆகும் . அதன் தன்மை சூரியனை போன்றது. எனவே சூரியகலை ! 2 உடன் தார கலை நான்கு சேர்ந்தால் 16கலை ஆகும் . இது சந்திரகலை16க்கு சமம் ஆகும் . இது தான்.
சூரியகலை(1 2 ) + தார கலை(4) = சந்திரகலை16
சூரியகலை= அ , தார கலை= உ , சந்திரகலை=ம
அ=உ =ம
12+4=16
இது சக்தி சமநிலை . இதனால் பிரபஞ்ச சக்தி 32 களையும் முழுமையாக பயன் படுத்தி உடல் 64 கலை சக்தி உற்பத்தி செய்யும் . உடல் அழியாது .
இதுவே வாசியோகம் உடலையும் உயிரையும் வளர்க்கும் விதம் . இக்கருத்தை திமூலர் திரு மந்திரம் பாடல் 855மற்றும்856 ஆகியவற்றில் சொல்லி உள்ளார் .
-எட்டெட் டனலிண் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்கு சூல்கலை
கட்டப்பட்டுமீ ரெட் டா மதிகலை
ஓட்டப்படா இவை ஒன்றோடொன் றாகவே
பாடல் 855
-எட்டெட்டும் ஈறாறும ஈரெட்டும் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றும் கலை என்ப
கட்டப்படுந தார கைகலை கதிர்நாலுள
கட்டிட்ட தொன்னுரற்றோ டர்றுங் கலாதியே
பாடல் 856
Sir, I read 10th lesson and tried tried chanting A + U + M, was able to feel vibration on head and throat, but was not able to feel on tip of spine.
உங்கள் பிறங்கை இடுப்பு முதுகு தண்டில் வையுங்கள் . நுனி நாவை நீட்டி மேல் அன்னத்தை தொடாமல் சிறிது வளைத்து கொள்ளுங்கள் . வாயை சிறிது திறந்து அ.......... என்று ஓசை தொடர்ந்து எழுப்புங்கள் . உங்கள் அ ஓசையென் அதிர்வு அலை உங்கள் பிறங் கையில் உணர்வீற்கை . . இதை பயிற்சி செய்து பார்க்கவும் .

Comments
Post a Comment