வாசி யோகம் பற்றிய ஒரு முழுமையான பார்வை.
{சித்தர்களால் பெரிதும் போற்றப்பட்ட , வணங்கப்பட்ட , ரகசியமான முறையில் பேணப்பட்ட அற்புதமான கலையை நம் சித்த நண்பர்களுக்காக முழுமையாக பகிர்கிறேன் . காலத்தால் அழியாத இந்த அற்புத கலையை நீங்களும் முறையாக பயின்று சித்தத்தை சிவமாகுங்கள். நன்றி .}
*பிரத்தியாகாரம்*
*******************
அறவழி வாழ்கை முறைகளையும், தேகத்தில் மூசசுகாற்று இயக்கத்தையும், இயம, நியம ஆசன, பிராணாயாம ஆகிய நான்கு அங்கங்களை வாசி யோகத்தில் படடித்தோம் .
இதுவரை மூலாதாரத்தில் மனதை நிறுத்தி வாசி உருவாக்கி வாசி பிராணயாமம் செய்வதை அறிந்துகொண்டோம் ..
வாசிஎன்னும் மாயக்குதிரையை நமது சுவாச நெறிகளால் சுவாசக்காற்ரால் உருவாக்கி யுள்ளோம்.. இந்த மாயக்குதிரை வெப்பத்துடன் சேர்ந்து காறறும வெப்பமாக அல்லது வெப்பகாற்ராக உடலுக்குள் மாறும் . அதன்பின் சக்தி அலையாக அல்லது குண்டளியாக மாறும் . அதன் பின் வாலை என்ற ஒளியலையாகமாறும் .வாசி என்ற குதிரையை மனம் குவித்தளால் இயக்கி நம் உடலுள் பயணிதது பூரணம் என்ற இறை ஒளியை உள்ளே பார்த்து அளப்பறிய சக்தி பெறுதல் மற்றும் காய சித்தி பெறுதல் ஆகியவை வாசியோகம். மற்றும் சிவயோகம் ஆகும். வாசியை மனதுடன் இணைத்து பரவெளியில் நிறாதார. தளங்களில் நிறுத்தி செய்யும் யோகம் மௌன யோகம்
இது பரவெளியில் இருக்கும் இறைவனை ஒளியாக கண்டு இறைவனுடன் இணைதல் . .
இங்கு வாசியின் உதவியுடன் நம்முள் பயணிக்கும் வித்தையை படிக்க போகிறோம் . நம்முள் பயணிக்கும் பாதையில் முதல்நிலை பிரத்தியாகாம் , இரண்டாம் நிலை தாரணை மூன்றாம் நிலை தியானம் நான்காம் நிலை சமாதி .. வாசி யோகத்தில் இவை முறையே ஐந்தாம் அங்கம் ஆறாம் அங்கம் ஏலம் அங்கம் மற்றும் எட்டாம் அங்கம் ஆகும் . . . .
வாசி யோகம் என்ற அஷ்டாங்க யோகத்தில் ஐந்தாம் அங்கம் ஆகிய பிரத்யாகாரம் பற்றி பார்ப்போம். . நம்முள் பயணிப்போம்
ஒருக்கால் உபாதியை ஒன்சோதி தன்னைப்
பிர்த்துணர்.வந்த உபாதிப் பிரிவை
கரைத்துனர் உன்னால் கரைதல் உள்நோக்கள்
பிரத்தியாகாரப் பெருமையா தாமே
-திருமந்திரம் பாடல் 585
உரைத்துமே சொல்லுகிறேன் பிரத்தியாகார
முன்மையார் வாசினையின் வழியிற் சென்று
மிரைத்துமே நடத்துவிக்கு மிந்திரியந்தானும்
மிகைமையா மனத்தை மெல்ல முயற்சியாக்கி
விரைத்துமே திரியிறதை திரிய வொட்டாமல்
வெட்டியதை மறைகிறதே பிரத்தியாகாரம்
-போகர் 1000 பாடல் 3 1 7
பிரானாயமத்தில் வாசி 3 2 : 6 4 : 1 6 உருவாக்கியபின் . கண்களை மூடி அமரவேண்டும் . வெளிப்புற சத்தங்களை காதது கேட்காமல் உதா சீனம் செய்யவேண்டும் . வாய் பேசாமல் நாவு சுவைக்காமல் இருக்க வேண்டும். மூச்சு நுகராமல் , உதாசீனம் செய்யவேண்டும் மூச்சு ச சீராக ஆழ்ந்து இயங்கவேண்டும் . உடல் புற உணர்வை உதாசீனம் செய்ய வேண்டும் .
மனதை ஒருமுகபடுத்தவேண்டும் . இதுவே இந்திரியங்களை புறவெளி செல்லாமால் தடுத்தல் . பின்பு மனதை குவித்து நமக்குள் மனக்கண்ணால் பார்க்க வென்டும் .
அப்படி பார்க்கும் போது நமது தேகம் கரைந்து மனதுடன் ஒன்றும் . உணர்வு ஏற்படும் . கண்.,காது , மூக்கு வாய் உடல் ஆகியவைகளின் செயல் பாட்டை உள்ளே திருப்பி உள்ளேனடப்பதை அறிய வேண்டும் .
இதுவே பிரத்யாகாரம் முதல் படி . . பிறத்தியா காரத்தில் ஆறு வகை உண்டு நமக்கு உள்ளே பார்க்கவேண்டியவைகள் இவைகள் . அதை அகத்தியர் சொல்கிறார் .
காணவே பிரத்தியாகாரந் தன்னை
கருவாக ஆறையுமே சொல்லக்கேளு
பூணவே சரீரமது பிரத்தியாகாரம்
பொருந்தி நின்ற இந்திரியம் பிரத்யாகாரம்
தோணவே பிராணம் பிரத்தியாகாரம்
சுகமான கரணமே பிரத்யாகாரம்
பேணவே காமியம்தான் பிரத்யாகாரம்
பெருமையுள்ள சர்வசங்க பிரத்தியாகாரம் .
-அகத்தியர் பூரண காவியம் பாடல் 4 9
காரம் மென்ற பிரத்தியாகாரம்
கருஅறிந்து ஆறுவகை நன்றாய் சொன்னேன்
பரமென்று எண்ணாமல் பதிவை பார்த்தால்
பலிக்குமட அஷ்டாங்க பதவி மைந்தா
சாரம் மென்ற பூரணத்தை தியானம் பண்ணி
சாங்கை யுடன் வாசியிலே சார்ந்து கொண்டு
வீரம்மென்ற மனத்தோடு யோகம் பார்த்தால்
வேதாந்த பதவியிலே விளங்கலாமே
-அகத்தியர் பூரண காவியம் பாடல் 5 0
மன்வைராக்கியமாக இறைவனை துதித்து வாசியில் சார்ந்து பிரத்தியாகாரம் ஆறுவகைகளை செய் . இதை அற்பம் என்று தள்ளாதே. அப்படி செய்தால் அஷ்டங்கயோகி அல்லது வாசி யோகி என்ற பதவி கிடைக்கும் . மற்றும் வேதாந்தி என்ற பதவி கிடைக்கும் ஆறுவகையான பிரத்தியாகாரங்களை நன்றாக சொல்லயுள்ளேன் செய்துபார் .
1. சாரிரம் பிரத்தியாகாரம் :
மனதை புறவெளியில் செல்லவிடாமல் உடலுக்கு உள் செலுத்துதல்
உடல் உறுப்புகளை உள்ளே மனக்கண்ணால் பார்த்தல்
2. இந்திரியம் பிரத்தியாகாரம்
கண் , காது செவி, மூக்கு ,உடல்பரப்பு ஆகியவற்றால் பார்த்து , கேட்டு , சுவைத்து , நுகர்ந்து உணர்ந்து ,. அறியும் புலன்களை உடலுள் செலுத்தி உடல் இயக்கங்களை உள்ளே அறிதல்
3 பிராணன் அல்லது பிராணம் பிரத்யாகாரம்
மூலாதாரத்தில் வாசியை இயக்கி அது எங்கு பயணிக்கிறது என்றும அதன் உணர்வுகளையும் இந்திரியங்களால் அறிதல் . . வாசி உருவாகும் போது பலவித ஓசை கேட்கும் . பலவித ஒளி உருவங்கள் தோன்றும் . பலவித வாசனை உணரப்படும் . மிசாரம் பாய்ந்தது போன்று உணர்வு வரும் . இது போன்ற வற்றை உள்ளே அறிவது .
4.கரண பிரத்தியாகாரம்
அந்தகரணங்கள் என்ற மனம் , புத்தி , சித்தம் , அகங்காரம் ஆகியவற்றை ஒருமுகபடுத்தி அறிவு கொண்டு அந்தகரனங்க்களை இயக்கி ஆறு சக்கரங்களை உள்முகமாக பார்த்தல்
5. காமிய பிரத்தியாகாரம் .
சக்கரங்களின் செயல்களான படைத்தல் , காத்தல் அழித்தல் , மறைத்தல் , அருளால் ஆகிய விரும்பி செய்யும் செயல்களை உள்ளே சக்கரங்களில் உணர்தல் .
6 . சர்வசங்க பிரத்தியாகாரம் :
மேற்சொன்ன ஐந்தையும் o ஒருங்கிணைத்து உள்முகமாக உணர்தல் .
இவைகளை செய்து பார்ப்பது மிகுந்த இன்பமானது .. உடனே எல்லாம் செய்து பார்க்காமல் ஒவவொன்ராக செய்து பாருங்கள் . சிறிது காலம் பிடிக்கும் . . பொறுமையாய் செய்யுங்கள் . முடிந்தவரை செய்யுங்கள்.
*தாரணை*
************
சென்ற பாடத்தில் நமது அந்தகரானங்கலான மனம் புத்தி , சித்தம் அகங்காரம் ஆகியவற்றை அறிவால் ஒரு நிலை படுததவேண்டும . இதனால் நமது புலன்கள் ஐந்தையும் உள்முகமாக பார்க்க வேண்டும் .. இப்பாடி உள்முகமாக பிரத்தியாகாரம் செய்யவேண்டும் . என்பதை பார்த்தோம் . உள்முகமாக பர்த்தபின் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்வது அடுத்த அடுத்த அங்கம் தாரணை . வாசி யோகத்தின் ஆறாவது அங்கம் தாரணை . இதில் நீங்கள் விரும்பிய தெய்வத்தை பார்க்கலாம் . .
முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னம் வந்தனர்க் கென்ன பிரமாணம்
முன்னூறுகோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமா ..
-திரு மூலர் திருமந்திரம் பாடல596
அரித்த உடலை ஐம்பூதததில் வைத்து
பொறுத்த ஐம்பூத சத்தாதியில் போந்து
தெறித்த மனாதி சத்தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே
-திரு மூலர் திருமந்திரம் பாடல597
. முன்பு பிறந்தவர்கள் அனைவரும் இறந்து போனார்கள் . இனி பிறப்பவர் இறக்கமாட்டார் என்பதற்கு உத்திரவாதம் இல்லை . இறப்பை தடுக்க முன்னூறு கோடி வழிகளை பேசி பயன் இல்லை . பெருவெள்ளம சிறிது சிறிதாக அரித்து கரையை அழிக்கும் ..இடிந்து போகும் கரை போன்று உடல் அழியும் தன்மை கொண்டது . இந்த அழியும் உடலை வாசியோகம் தவிர்த்து பிற உபாயங்களால் காக்க முடியும் என்பது மாயம் போன்றது . பிற உபாயங்களால் அழியாமல் காகக முடியாது .
ஐயம் பூத்ங்களால் ஆனவன் மனிதன் , அரிக்கப்பட்டு அழியும் உடல் கொண்டவன் மனிதன் . அழியா உடல் பெறும் வழி இது . மனம் ,புத்தி, சித்தம் , அகங்காரம் ஆகிய மனதின் தொகுதிகளான அந்த காரணங்களை அறிவால் நெறி படுத்தி ஒருமுக படுத்து . ஒருமுக படுத்திய மனத்தால் ஐம்புலன்களையும் உள்முகமாக திருபபி , உன்னுள் பார் .. அங்கு ஐம்பூதங்களை இயக்கும் சக்கரங்கள் ஆதார தளங்களிளுண்டு . அவற்றை பார்.. தற்பரம் என்ற இறைவன் அங்கு உள்ளான் . அவன் பலவடிவுகள் உடையவன் . . நீ விரும்பும் வடிவினனாக அவனை பாவித்துக்கொள் . இதில் உயர்ந்தவடிவு ஒளிவடிவு . நீ பாவித்த அந்த தற்பரம் என்ற இறைவனுடன் நீ ஒன்றினால் தாரணை உருவாகும் .. இந்த தாரணை ஆறுவகையாகும்.
விளங்கவே தாரனைதான் ஆறுங்கேளு
விசையான பூத தாரனை தான்னொன்று
உளங்கனிந்த பிராண தாரணை தான்னொன்று
உத்தமனே கரண தாரனை தான்னொன்று
களங்கமில்லாத தெய்வதாரனைதான் னொன்று
கண்டறிந்த தத்துவ தாரனை தான்னொன்று
இலங்க்வித்த பிரம்ம தாரனைதான் ஒன்று
பெருமையுடன் தாரணியில் பிலமாய் நில்லே
-அகத்தியர் பூரனகாவியம் 7 வது சருக்கம் பாடல் 50
தாரணை ஆறுவகை படும் . அவற்றை பார்ப்போம் .
பூத தாரணை .
மண் , நீர், நெருப்பு , காற்று , மற்றும் ஆகாயம் ஆகிய பூதங்களை ஒவவொன்றாக மூலாதாரத்தில் பாவித்து அவற்றை அங்கு பார்த்தல் அதனுடன் ஒன்றுதல். இதுபோன்று சிலர் நவகிரகங்களை யும் பார்பதுண்டு ,. வாசி உருவாக்காமல் இவ்விதம் பார்ப்பதை பஞ்ச பூத தவம் என்றும் , நக்கிரக தவம் என்றும் சில குரு மார்கள் சொல்லுவார்கள் .
1.பிராணதாரனை
-------------------------
பிராணன் என்ற மூச்சு காற்று உடலுள் செல்வதையும் அது செயல்படும் விதத்தையும் உள் உணர்வால் பார்த்தல் .
வாசி உருவாக்காமல் இவ்விதம் பார்ப்பதை விபாசன என்று சில குருமார்கள் சொல்லுவார்கள். காக புசுண்டர் இதன் மேன்படுத்தப்பட்ட தாரனையாக வாசி தாரணை பற்றி சொல்கிறார் ..
வாசியோகமுறை இல்லாமல் உள்முகமாக பார்க்க சொல்லும் விபாசனா தியானம்( முழுமை இல்லா பிராண தாரணை ) ,, பஞ்ச பூத தபஸ் அல்லது தியானம், நவக்கிரக தபஸ்( முழுமை இல்லா பூத தாரணை ) அல்லது தியானம் . இவை தாரணயின் . முழுமை அற்ற செயல் முறை .
.
வாசி தாரணை (பிராண தாரணை ) பற்றி காக புசுண்டர் சொல்வதை பார்ப்போம் . மேலும் ஞானம் உருவாகும் இடம் மற்றும் ஆன்மா பற்றியும் சொல்கிறார். .அது மட்டும் இல்லை வாசி யோகத்தில் நரை முடி கறுப்பாவது எப்படி, என்றும் சொல்கிறார் அதுவே காய சித்தி என்கிறார் ..
தானென்ற ஞானமே பிரம்மரந்த்ரம்
தானிருந்து பிறந்ததுவும் திரிகால வர்த்தம்.
வானென்ற திரிகாலம் ஆன்மா உச்சி
மண்டையததின் மேலேற உச்சி கண்ணில்
ஆணென்ற கன்னதுமே யோகத்தாலே
அவயோகம் வாசி தாரனையினாலே .
ஏனென்ற தாரனைதான் வாசி மூச்சாம்
இவ்வாசி யுன்ட அண்ணம் செரிக்கும் போதே
-காக புசுண்டர் பேரு நூல் காவியம் பாடல் 893
செரிக்கும் போது மலம் உருண்ட காற்றுதானே
தீப்புகைபோல் புகைகிளம்பி மூலம் மேறும்
மரித்ததுவும் வந்தகலை வாசியாகி
மாறாது கலை பிரிந்து மாறிக்கொள்ளும்
வெரித்துவந்த முனை மூக்குத தண்டு உச்சி
விரைந்து வதில் பாய்வதுவும் ஆன்மாவாகும்
முரித்துவதி லாடுகின்ற ஆன்மாதானும்
முன் பிறந்த உடலுயிரும் எழும்பிற்றானே
-காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 894
எலும்பென்ற முதுகு தண்டு எலும்பினூடே
இல்லை யூசி செலுத்துமது வாசல்போல
எலும்பினுள் துவாரமது ஓடும் மார்க்கம்
இருக்கின்ற பாதைவழி பிரானனாகும்
எலும்பினுள்ளே ஓடுகின்ற வாசி ஆன்மா
ஏறியது ஓடுவது முனை மூக்குதான்
எலும்பிலே வாய்வான ஆன்மா வந்தால்
இப்படியே புருவமத்தி ஏறும்பாரே
-காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 895
ஏறியே ஆதாரத் திடையில் சென்று
இடை நடுவே நெட்டுவழி பாதை உச்சி
ஏறியே மண்டடைநாடு உச்சி நேராய்
ஏறியந்த ஒட்டின்மேல் உசசி தோலில்
ஏறிநின்று மண்டையெல்லாம் ரோமமாச்சு
ஏறியே இறங்கியதால் மேல்கால் எல்லாம்
இயல்ரோமம அங்கங்கே முளைத்து சேர்ந்தே
-காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 896
சேரவே காயசிததி ரோமந் தானும்
சிரசிருந்த மயிர்வெள்ளை கருத்துபோகும்
மாறவே சாரிரங்கள் வெகு காலந்தான்
மயிர்கருது உடல் பிலத்து உயிர்கட்டுண்டு
சேரவே இவ்வான்மா உச்சி ரோமம்
சேர்ந்தேறி மயிர்மார்கத் துடர்ந்து பற்றி
மிகநடக்கும் பிரகாயப் பிரவேச்ந்தான்
-காக புசுண்டர் பெரு நூல் காவியம் பாடல் 897
வாசி உருவாக்கி, வாசி யோகம செய்தால் தாரணை உருவாகும். .
. இதனால் ஞானம் கிடைக்கும் . ஞானம் என்பது பிரம்மரந்திரம் என்ற சகஸ்ரார தளத்தில் உருவாகும் இங்கு கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர் காலம் ஆகிய மூண்று காலங்களில் நடை பெறும் நிகழ்வுகள் தெரியும் இது ஆன்மா உச்சி என்று சொல்லப்படும் ..
பிராணன் உருவாதல்,பயணம் மற்றும் செயல் பாடு .
நாம் உண்ணும் உணவு செரித்து மலம் வெளியேறும் . அதன் சத்து உயிர்சக்தியாகி வெப்பத்துடன் காற்றாகி ( அபாணன் ). மூலத்தில் ஏறும் . நாம் பிரபன்ச்சத்தில் பெற்ற உயர் சக்தி பிராணவாயு மூலம் மூலாதாரத்தில் அப்பன வாயுவை மரிக்கும் எனவே மூலாதாரத்தில் அப்பாணன் கிழே இழுக்கும் . பிராணவாயு மேலே இழுக்கும . இந்த இயக்கம் உடல் சுருங்கி விரியும் இயக்கத்தை தறும் . இது அடிப்படை பிராண இயக்கம்
இதனால் நுரை ஈரல் சுருங்கி விரியும் பிற உறுப்புகளும் சுருங்கி விரியும் மற்றும் சுவாசம் ஏற்படும் மூலாதாரத்தில் உருவாகும் பிராண இயக்கம் . இதனால் இரத்தவோட்டம் வாயு வோட்டம் ஆகிய இயக்கங்கள் நடை பெறும்... இதனால் பிராணன் என்ற உயிர் உருவாகும்
மூலாதாரத்தில்உருவான பிரான் முதுகுத்தண்டு வழியாக மேலே ஏறி மூக்கின் நுனிக்கு செல்லும் அங்கு சுவாசத்தின் கலை மாறலை செய்யும் . இந்த உயிரின் இயக்கம் ஆன்மா
.
பிராணன் மூசசு காற்றில் உள்ள உயிர் சக்தியை எடுத்துக் கொண்டு மூலாதாரத்தில் இருந்து ஆதார தலங்களின் ஊடேவலைந்து வலைந்து பிங்கலைவழி புருவ மத்தி என்ற சுளுமுனைக்கு மேலே ஏறும். . அதுபோன்று இடகலை இயக்கமும ஆதார தளங்களில் ஊடே வலைந்து சென்று சக்தியை ஆங்காங்கே சக்கரங்களில் இருந்து உடல் உறுப்புகளுக்கு பிரித்து கொடுக்கும். இதனால் உயிர்சக்தி எலும்பின் உள்ளே உள்ள மச்சை வரை செல்லும் ..
. இந்த சுவாசத்தை கால கணக்குடன் நெறிபடுத்தினால் வாசி உருவாகும். முதலில் வாசியால் அழுத்தப்படும் மூலாதாரம் , சுழிமுனை நாடியை உருவாக்கும்( இது பத்தாவது நாடி.) மற்றும் தாரைகலை உருவாக்கும் . மூலாதாரத்தில் இருக்கும் வெப்பமும் காற்றும் குண்டலி உருவாக்கும் .. அழுத்தப்படும் குண்டைலி வாலை என்ற ஒளியாக மாறும். இந்த சுழிமுனை நாடி மூலாதாரத்தில் இருந்து நேரே இடகலை பிங்கலை பின்னலுக்கு நடுவே சென்று சுழிமுனை அடையும் . இதன் வழி குண்டலி அல்லது வாலை பயணிக்கும் . இந்த வாசியின் ஓட்டத்தை உணர்ந்தால் வாசி தாரணை உருவாகும் ..
. .
வலது நாசி சுவாசம் பிரபன்ச்ச சக்தியையும் உடல் உருவாக்கிய சக்தியையும் எடுத்து செல்லும்( 1 2 ). இடது நாசி சுவாசம் சக்தியை பிரித்து கொடுக்கும்(1 6 ) . இரண்டுக்கும் இடையே உள்ள குறைபாடு 4 கலை சக்தியை தாரைகளை கொடுக்கும்
.
இந்த உயிர் சக்தி ஓட்டம் மூலாதாரத்தில் இருந்து ஒவொரு தளமாக ஏறி சென்று சுழிமுனை அடையும் . அங்கிருந்து மேலே ஏறி மண்டை ஓட்டின் துவாரங்கள் வழி மண்டை மேல் தோல் அடையும் . இந்த சக்தி மண்டை ஓட்டில் முடிகளை உருவாக்கி அவற்றை கருப்பாக வைத்துள்ளன . இந்தசக்தி கிழே இறங்கி உடல் முத்தும் பரவி உடலில் ரோமம்கலை உருவாக்கியது .. இந்த உயிர்சக்தி குறையும் போது நரை முடி மற்றும் வழுக்கை ஏற்படுகிறது ..
கற்பம் உண்டு வாசியோகம் செய்து தாரைகளை உருவாக்கி சக்தியை பெருக்க வேண்டும் . வாசியோக தாரணையில் மீண்டும் உயிர் சக்தி மண்டை ஒட்டு துவாரம் வழி முடிகளுக்கு கொடுக்கும் ., மீண்டும் கிழே இறங்கி உடல் முழுது பரவும். நரைத்த முடி கருக்கும் . உடல் வலுவடையும் . இதை வசர தேகம் என்பார்கள் இதுவே காய சித்தி .
3. கரண தாரணை
----------------------------
மனம் ,புத்தி, சித்தம் , அகங்காரம் ஆகிய மனதின் தொகுதிகளான அந்த காரணங்களை அறிவால் நெறி படுத்தி ஒருமுக படுத்து . ஒருமுக படுத்திய மனத்தால் ஐம்புலன்களையும் உள்முகமாக திருபபி , உன்னுள் பார் .. அங்கு ஐம்பூதங்களை இயக்கும் சக்கரங்கள் ஆதார தளங்களிளுண்டு . அவற்றை பார். தற்பரம் என்ற இறைவன் அங்கு உள்ளான் . அவன் பலவடிவுகள் உடையவன். அவனை பார் .
4.தெய்வதாரனை .
-----------------------------
தற்பரம் என்ற இறைவன் பலவடிவுகள் உடையவன். கரணதாரனை உருவாக்கி அதில் நாம் விரும்பும் தெய்வுருவை பாவிக்க வேண்டும் . அவ்விதம் பாவனை செய்தால் நீங்கள் விரும்பும் தெய்வம் உங்களுக்கு புலப்படும் . . இந்த தாரணயில் நீங்கள் விரும்பும் சித்தரையும் காணலாம் . . இவ்விதம் ராம கிருஷ்ணர் காளிமுதல் இயேசு வரை தரிசித்தார் .
5. தத்துவ தாரனை
------------------------------
இறைவன் 9 6 தத்துவங்களாக மனிதனாக மாறி இருக்கிறான் . . இந்த தத்துவக்கலை நம்முள் கண்டு அதனுடன் ஒன்றுவது ..
6 பிரம்மதாரனை.
--------------------------
தன்னை இறைவனாக பாவித்து தன்னுள் பூரணமாக ஒலளிவடிவில் உள்ள இறைவனாய் காண்பது . அந்த ஒலிவடிவ இறைவனுடன் ஒன்றுவது . இது தான் அவன் ஆதலில் முதல் நிலை .

Comments
Post a Comment