Skip to main content

Posts

www.supremeholisticinstitute.com மன்மனம் எங்குண்டு? மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தவேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை நிறுத்தவேண்டாம் மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே . – அகத்தியர் ஞானம் 23 மனம்  செம்மையானால் மந்திரங்களும் வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம் என்று மனத்தின் மாண்பை அகத்தியர் விளக்குகிறார். அத்தகைய மனத்தின் மாண்புகள்தான் எத்தனை எத்தனை? மனத்தைச் செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன? என்று சித்தர்கள் எனன கூறுகிறார்கள் என்று பார்த்தால், “மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை” மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம். இவ்வாறு  வாயுவுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்குகிறார் திருமூலர். மூச்சுக்கும் மனத்திற்கும் இடையில் இருக்கும் பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும் மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு வழிகளில் கூறிவிட்டார்கள். இன்னும் சிவவாக்கியர் என்னும் சித்தர், உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை கருத்திலே இருத்தியே கப
Recent posts
www.supremeholisticinstitute.com 🌺🌟   அகத்தியர் வாக்கு  32  🌟🌺           🔯  சிவ ஞானம்   🔯 "பாரடா சிவஞான மென்ன வென்றால் பாருலகில் நின்றவுயிர் பயிர்களெல்லாம் நேரடா தன்னகம்போல் காணவேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்கவேணும் காரடா சகலகலைக் கியானமெல்லாங் கருத்துகந்து பூரணமாய்க் காண வேணும் மேரடா மேருகிரி அந்தங்கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கும்பாரே" 💠  பொருள் விளக்கம்   💠 சிவஞானம் என்றால் என்ன என்று  கூறுகிறார் அகத்தியர் உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தன்னுயிராகக் காண வேண்டும் நேர்மையுடன் சத்தியம் தவறாது  நிற்கவேண்டும் எல்லா ஞானங்களையும் பூரணமாக  இறைவனாகக் காணவேண்டும் அவற்றைப் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும்  அப்போது மேரு கிரி எனப்படும் கடவுளின் இருப்பிடம் ஆன ஞானத்தின் உச்ச நிலை புலப்படும்  வார்த்தைகளால் விளக்க முடியாத ஞானம்கூட அப்போது தெளிவாகப் புரியும்  இதுவே சிவஞானம்  என்கிறார். அகத்தியர்.
*சித்தர்களும் சிவபெருமானும்...!!* கேள்வி 1 ; *சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு?* அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன...? யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை. கேள்வி 2 ; *சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்...?* ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை
லம்பிகா யோகம் ******************* சித்தர்கள் ஜீவசமாதி அடைய மேற்கொண்ட வழிமுறை லம்பிகாயோகம் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்! மரணமில்லாமல் வாழ லம்பிகா யோகம்! முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள். மேலும் மரணத்தை வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும். இதனை யோக நூல்கள் கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன. உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வ
அடங்கி நின்ற வாசி கீழே இறங்கு மானால்     அடுத்தடுத்துப் பயிற்சி செய் ஆனமட்டும் சிந்தை புறஞ்செலா சிவயோகம் இதுவன்றோ     சந்ததமும் செய்துவர சமாதி கூடும் அசையாத பிராணனுடன் அசையும் வாயு     ஐக்கியம் செய்துவிடப் பழக வேண்டும் விட்ட எழுத்துடனே விடாத எழுத்தையிங்கு     கட்ட வேண்டும் உயிர் காக்க வேண்டும்.    (29). ஓமென்ற அட்சரத்தில் ஒளிந்தே நிற்கும்      'உம்' மென்ற நாதமதை 'ஊமை' என்றார் சுழிமுனையின் ஒளியதிலே உணர்வை ஊன்றி      சுகவெளியில் 'உம்' மென்ற நாதம் கேளு நாதத்தில் மனமென்ற ஐந்துதலை நாகம்      நன்றாக இலயமாகும் ஐம்புலன்களோடு போதமது கூடுமப்பா மெளனம் கொஞ்சும்      போக்கறியான் ஞானியல்ல புண்ணாக்காமே                                                                                           (30) கொலை,களவு,பொய்,சூது கூடாதப்பா       புலை, கஞ்சா, லாகிரிகள் ஆகாதப்பா தன் மனைவி, தன் இல்லம் என்றாலும்தான்     அருந்தலிலே பொருந்தலிலே அளவு வேண்டும் தன் உழைப்பில், தன் பணத்தில் வாழ வேண்டும்     தயவுடனே ஏழையர்க்கு இரங்க வேண்டும் இதிலொன்று தவறிடினும் சித்தியில்லை.
மனிதபிறவி... ஓா் உயிர் மனிதபிறவி எடுக்கவேண்டுமானால் என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் கடந்துதான் பின் மனிதபிறவியை அடையமுடியும். அப்படி அடைந்த மனிதன் மரணித்தால் மீண்டும் புல் பூண்டு மரம் செடி கொடி பறவை விலங்கு. என என்பத்துநான்கு லட்சம் பிறவிகளையும் பெற்று பின் மனிதபிறவி பெறுவான் என்று சித்தா்களின் நூல் கூறுகின்றது.. ஆனாள் இறைவனின் அருள்பெற்ற புன்னியவான்களுக்கு மட்டுமே உடனடியாக மனிதபிறவி கிடைக்கும்.. அல்லது தவங்களை மேற்கொண்டவா்களுக்கு மனிதபிறவி கிடைக்கும்.. உதாரணத்திற்க்கு புராணகாவியங்களில் மகாபாரதத்தில்.. பீஷ்மரை வதம் செய்வதற்க்காக இறைவனிடம் தவம் செய்த அம்பைக்கு பீஷ்மரை வதம் செய்வதற்க்காக அடுத்த மனிதபிப்பையளித்திருப்பாா்.. ஆனாள் மகாபாரதத்தில் கா்ணனின் பிறப்பென்பது பலயுகங்கள் கடந்து நிகழ்ந்திருக்கும்.. அதாவது கா்ணன் பூா்வஜன்மத்தில் சகஸ்ரகவசன் எனும் ஒரு அசுரனாவான்.. சக்திவாய்ந்த ஆயிரத்தெட்டு கவசங்களை பெற்றிருந்தான்.. ஒரு கவசத்தை உடைக்கவேண்டுமென்றால் பதினான்குவருடம் தவம் செய்து பதினான்குவருடம் அவனுடன் யுத்தம்செய்தால் மட்டுமே அவனின் ஒரு கவசத்தை உடைக்கமுடியும்.. இப்படியாக ஆயிரத்தெட்டு
அபூர்வ வாசி ரகசியம் ************************ விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.    இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.